World AIDS Day 2025: உலக எய்ட்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

World AIDS Day: உலக எய்ட்ஸ் தினம் ஏன் டிசம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது? 2025 கருப்பொருள் என்ன? அதன் வரலாறு, முக்கியத்துவம், விழிப்புணர்வு நோக்கம் அனைத்தும் இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
  • SHARE
  • FOLLOW
World AIDS Day 2025: உலக எய்ட்ஸ் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

ஆண்டுதோறும் டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) எனக் குறிப்பிட்டு உலகளவில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரசால் (HIV) ஏற்படும் இந்த நோய், சிகிச்சை மிகக் கடினமானதும், உயிருக்கு ஆபத்தானதும் என்பதால், மக்கள் விழிப்புணர்வு பெறுவது மிக அவசியமானதாக கருதப்படுகிறது.


முக்கியமான குறிப்புகள்:-


எச்.ஐ.வி – எய்ட்ஸாக மாறும் தீவிர நோய்

HIV என்பது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் வைரஸ். இது CD4 செல்களை தாக்கி உடலின் பாதுகாப்பு செயல்பாட்டை பாதிக்கிறது. சிகிச்சை தாமதிக்கப்பட்டால், இது எய்ட்ஸ் நிலைக்கு முன்னேறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நோயைத் தடுப்பதற்கான முக்கியமான ஆயுதம் விழிப்புணர்வே ஆகும்.

what-is-the-theme-significance-and-history-of-world-AIDS-Day-2023-02

உலக எய்ட்ஸ் தினத்தின் வரலாறு

உலக எய்ட்ஸ் தினத்தை உருவாக்கியவர்கள் WHO-வின் பொது தகவல் அதிகாரிகளாக இருந்த ஜேம்ஸ் W. பன் மற்றும் தாமஸ் நெட்டர்.

  • 1988 டிசம்பர் 1 அன்று முதன்முதலாக உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • அமெரிக்க தேர்தல்களுக்கும் கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்கும் இடைப்பட்ட நேரம் என்பதால் ஊடக கவனத்தை பெற டிசம்பர் 1 தேர்வு செய்யப்பட்டது.
  • முதலில் WHO நடத்திய இந்த நாள், 1996 முதல் UNAIDS-க்கு மாற்றப்பட்டது.
  • 1997-ல் 'World AIDS Campaign' தொடங்கியதன் மூலம், விழிப்புணர்வு நிகழ்வுகள் வருடம் முழுவதும் தொடரும் வகையில் வலுப்படுத்தப்பட்டது.

1988 முதல் ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் தினம் உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கிய நாளாக உள்ளது.

உலக எய்ட்ஸ் தினம் 2025 – கருப்பொருள்

“Breaking Barriers, Transforming the AIDS Response” அதாவது, “தடைகளைத் தாண்டி, எய்ட்ஸ் மறுமொழியை மாற்றுதல்”. இந்த கருப்பொருள், எச்.ஐ.வி தடுப்பு, சிகிச்சை, சுகாதார சேவைகள் மற்றும் நிதி இடைவெளிகள் போன்ற சவால்களை வலியுறுத்துகிறது. விழிப்புணர்வு மட்டும் போதாது; சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல் அவசியம் என்பதை இது நினைவூட்டுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: HIV Symptoms: எச்சரிக்கை! இந்த அறிகுறிகள் எல்லாம் எச்ஐவிக்கான ஆரம்ப கால அறிகுறிகளாம்.

உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கியத்துவம்

  • களங்கத்தை அகற்றுதல்

எய்ட்ஸ் குறித்து பேசுவதிலும், சிகிச்சை பெறுவதிலும் இன்னும் பலர் வெட்கப்படுகிறார்கள்.

  •  சமூக ஆதரவு

HIV-பாசிட்டிவ் நபர்கள் பெரும்பாலும் பாகுபாடு, தனிமை, மனஉளைச்சல் போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள்.

  • நோய் பரவலைத் தடுக்க உதவி

பரவல் வழிகள், பாதுகாப்பு முறைகள், சிகிச்சை மற்றும் பரிசோதனை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

  • உலகளாவிய ஒற்றுமை

ஒரே நாளில், உலகம் முழுக்க மக்கள் HIV எதிர்ப்பில் ஒரே குரலில் நிற்கும் தருணம் இது.

what-is-the-theme-significance-and-history-of-world-AIDS-Day-2023-01

இறுதியாக..

1988 முதல் இன்று வரை, உலக எய்ட்ஸ் தினம் அதன் நோக்கும், முக்கியத்துவமும் குறையாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், விழிப்புணர்வு ஒரு நாள் நிகழ்வு அல்ல, மாறாக நீண்டகால சமூக சவால் என்பதை நினைவுபடுத்துகிறது. எய்ட்ஸ் தடுப்பு, சிகிச்சை, சமூக ஆதரவு - இவை அனைத்தும் இணைந்தால் மட்டுமே HIV-ஐ கட்டுப்படுத்த முடியும்.

பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்துக்காக தொகுக்கப்பட்டுள்ளது. HIV/AIDS தொடர்பான எந்த உடல்நலக் கேள்விகளுக்கும் நிபுணர் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

பல நோய்களுக்கு முக்கிய காரணம் வீக்கம் தான்.. உங்க உடலில் வீக்கத்தின் அளவை சரிபார்ப்பது எப்படி?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 30, 2025 21:35 IST

    Published By : Ishvarya Gurumurthy