Early Symptoms Of HIV: எச்.ஐ.வி என்பது எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ரெட்ரோ வைரஸ் ஆகும். இது உடலில் நோயெதிர்ப்புத் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலில் நோயெதிர்ப்பாற்றல் சரிவர செயல்படாமல் பல்வேறு தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கலாம். இந்த நோயெதிர்ப்புச் சக்திகளை அழிக்கக் கூடிய கொடிய நோயாகவும், வேகமாகப் பரவும் வைரஸ் ஆகும். இந்நோயின் பொதுவான மற்றும் ஆரம்ப கால அறிகுறிகளைக் கண்டறிவது அவசியமாகும்.
எச்ஐவியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்க்க முடியும். மேலும், எச்ஐவி-யின் அறிகுறிகள் அந்த வைரஸின் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்தே அமையும். மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடலின் நீர்மங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் இந்நோய் பரவும். எனவே, இந்த நோயின் ஆரம்ப கால கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Influenza Flu Preventions: மக்களே உஷார்.! பயமுறுத்தும் இன்புளூயன்சா ப்ளூ.!
உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day 2023)
மிகக் கொடிய தொற்று நோயாக விளங்கும் இந்த எச்ஐவி நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக வெளியே தெரியாமல் இருந்து, அதன் பின்னரே வெளிவரும். எனவே எச்ஐவி தொற்று உள்ளதை சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த எச்ஐவிக்கான சிகிச்சை முறை மற்றும் காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எச்ஐவி-யின் சில ஆரம்ப கால அறிகுறிகளைக் காணலாம்.
HIV தொற்றின் ஆரம்பகால அறிகுறிகள்
எச்ஐவி தொற்றின் ஆரம்ப கால நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து எய்ட்ஸ் உயிர்க்கொல்லியைத் தவிர்க்கலாம்.
எடை குறைதல்
உடல் எடையில் வேகமான மாற்றங்கள் நிகழும். அதாவது வழக்கத்தை விட வேகமாக உடல் எடை குறைந்து வருவது எச்.ஐ.வியின் அறிகுறிகளில் ஒன்றாகும். தொடர்ந்து எடை குறைந்து கொண்டே வருவது, இந்நோயின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இதில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் மோசமானதாக மாறிவிடும்.
நகங்களில் கண்டறியலாமா
எச்ஐவி நோய்க் கிருமியின் பாதிப்பை நமது நகங்களில் கண்டறியலாம். இதன் அறிகுறிகள் விசித்திரமாக இருப்பது, எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இந்த வகை அறிகுறியில், நகங்கள் பிரிவதும், நகங்களின் வண்ணங்கள் குறைவதும் அடங்கும். எனவே, இந்த அறிகுறியை கண்டறிந்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: World AIDS Day: இவங்களுக்கு கண்டிப்பா எய்ட்ஸ் வரும்! ஜாக்கிரதையா இருங்க!
தொடர் இருமல்
எச்ஐவியின் அறிகுறிகளில் ஒன்றாக தொடர் இருமலும் உள்ளது. ஆனால், சில நேரங்களில் இந்த இருமல் அலர்ஜியால் கூட வரலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்ஐவி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகமாகும். எனவே தொடர் இருமல் உள்ளவர்கள் விரைவாக நோய் கண்டறிதலை அவசியமாகும்.
தோல் மாற்றங்கள்
எச்ஐவியின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று தோலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். இந்த நிலையில், சருமம் மென்மைத் தன்மையை இழந்து சொரசொரப்பாக மாறலாம். இதனால் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாகும். எனவே, தோலில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மூட்டு வலி
எச்ஐவியால் பாதிக்கப்படும் போது, தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்க முடியாத வலிகள் ஏற்படும். எனவே தொடர்ந்து மிகுந்த வலியை அனுபவிக்கும் ஒருவர், உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: பலருடன் உடலுறவா.? இத ஞாபகத்துல வச்சுக்கோங்க.!
உடல் சோர்வு
எச்ஐவி நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும் போது அதிக அளவில் உடல் சோர்வு ஏற்படும். இதனால், சோர்வாகவும் மந்தமாகவும் உணர்வர். எச்ஐவி-யின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாக இந்த உடல் சோர்வு மற்றும் களைப்பு நிலை ஏற்படுகிறது.
தலைவலி
இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகவே மாறி விட்டதாகும். இதுவும் எச்ஐவி பாதிப்பினால் ஏற்படும் அறிகுறியாகக் கருதப்படுகிறது. மேலும், இது எச்ஐவிக்கான ஆரம்ப அறிகுறியாக இருப்பதால், ARS பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 1 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தினமாகக் கொண்டாப்பட்டு வருகிறது. எச்ஐவி யால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை என்ற நிலை வருவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வும், பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, எச்ஐவி-யின் ஆரம்ப கால அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு விரைவில் சிகிச்சை பெறுவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோயாக மாறுவதைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World AIDS Day 2023: உலக எய்ட்ஸ் தினம் வரலாறு மற்றும் முக்கியதுவத்தை அறிவோமா?
Image Source: Freepik