இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு மெனோபாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு அர்த்தம்

  • SHARE
  • FOLLOW
இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு மெனோபாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு அர்த்தம்


World menopause day what are the early signs of menopause: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் முக்கிய நிகழ்வாகவே மாதவிடாய் சுழற்சி கருதப்படுகிறது. இது பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட வயதில் முடிவடையும். ஒரு பெண் வழக்கமாக 10 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட நேரமானது முதல் மாதவிடாய் அடையும் நேரமாகக் கூறப்படுகிறது. பெண்கள் கருவுறுதலுக்கான ஒரு முக்கிய காரணமாகவே மாதவிடாய் நிகழ்வு ஏற்படுகிறது. எனினும், இது குறிப்பிட்ட காலத்தில் முற்றிலும் நின்று விடும்.

இவ்வாறு இயற்கையாகவே, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று விடும் நிலையானது மெனோபாஸ் நிலை என்றழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தாயாகும் திறனை இழக்கிறார்கள். மேலும் மெனோபாஸ் நிலை அவர்களின் உடல் மற்றும் மன நலத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இது ஒரு நோய் அல்ல. மாறாக, வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய இயல்பான செயல்பாடு ஆகும். எனவே இதை பெண்கள் எந்த மன அழுத்தமும் இல்லாமல் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: World Menopause Day 2024: உலக மெனோபாஸ் தினம் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தீம்…

உலக மெனோபாஸ் தினம் (World Menopause Day 2024)

மெனோபாஸ் நிலை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் உலக மெனோபாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவர்களுக்கு மெனோபஸ் குறித்த விழிப்புணர்வை வழங்குவதுடன், அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஆதரவு விருப்பங்களைப் பகிர்வதற்காகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் ஒவ்வொரு பெண்ணும், தங்கள் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் ஏற்படும் உயிரியல் மற்றும் உடலியல் மாற்றங்களை நன்கு புரிந்துகொள்ள ஏதுவாக அமைகிறது.

மாதவிடாய் எந்த வயதில் நிற்கும்?

இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயது பொதுவாக 45-50 என கூறப்படுகிறது. எனினும், அவர்களுக்கு ஏதேனும் அறுவைசிகிச்சை அல்லது புற்றுநோய் காரணமாக கருப்பையை முன்கூட்டியே அகற்ற வேண்டியிருப்பது போன்றவற்றால் மாதவிடாய் நிற்கக் கூடும்.

மாதவிடாய் நிற்கும் முந்தைய காலத்திற்கு பெரிமெனோபாஸ் என்று பெயர். அதாவது அதாவது மெனோபாஸ் நிலைக்கு முந்தைய நிலையாகும். இந்நிலையில் மாதவிடாய் ஒழுங்கற்றதாகத் தொடங்கலாம். அதனைத் தொடர்ந்து, மெனோபாஸ் நிலையில் முற்றிலும் நிற்கக் கூடும். இந்த மெனோபாஸ் நிலையில் மாதவிடாய் முற்றிலும் நின்று விடும். பொதுவாக, 40 வயதுகளின் நடுப்பகுதியிலிருந்து பெரிமெனோபாஸ் நிலை தொடங்கலாம். ஆனால், சில பெண்களுக்கு பெரிமெனோபாஸ் நிலை ஏற்படாமல் அவர்கள் நேராக மெனோபாஸ் நிலையை அடைவர்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!

மெனோபாஸின் ஆரம்ப அறிகுறிகள்

மாதவிடாய் சார்ந்த பெரும்பாலான அறிகுறிகள் பெரிமெனோபாஸ் நிலையில் உணரத் தொடங்கலாம். இந்நிலையில் சில பெண்கள் பாதிக்கப்படலாம், சிலர் பாதிக்கப்படாமலும் இருக்கலாம். மாதவிடாய் நிற்பது திடீரென நடக்காத போது, அது காலப்போக்கில் சில அறிகுறிகளுடன் நிற்கும். இதில் மெனோபாஸ் நிலையில் ஆரம்ப அறிகுறிகளைக் காணலாம்.

  • ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். அதாவது பெண்களுக்கு சீரான மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகிறது.
  • சிலருக்கு உஷ்ணம் இல்லாவிட்டாலும், இரவில் தூங்கும் போது அதிக வியர்வை உண்டாகும் வாய்ப்புண்டு
  • மெனோபாஸ் நிலையை அடையும் போது பெண்கள் திடீரென அதிக வெப்பத்தை உணர்வர்

இது தவிர, இன்னும் சில அறிகுறிகள் உணரப்படுகிறது.

  • எரிச்சல்
  • மனச்சோர்வு
  • கவலை
  • மனநிலை மாற்றங்கள்
  • சோர்வு
  • தலைவலி
  • சரியாக தூங்காமல் இருப்பது

இது போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படலாம்.

மாதவிடாய் நின்றதா என்பதை தீர்மானிப்பது எப்படி?

உண்மையில் மாதவிடாய் நிற்கும் போது மாதவிடாய் நிறுத்தம் என்பது அறியப்படுகிறது. ஆனால், மாதவிடாய் நிறுத்தம் நேரத்திற்கு முன்பே நடந்தால், அதற்கான காரணங்களை மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறியலாம். இது தவிர, உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளைக் கண்டறிந்த பிறகு மருத்துவர் இரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தலாம். இதில் கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனை, தைராய்டு செயல்பாடு சோதனை போன்ற பல்வேறு சோதனைகள் அடங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Bone Health Strengthening Tips: மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் மூட்டு வலி. எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

Menopause Symptoms: மாதவிடாய் நிறுத்தத்திற்கான முக்கிய அறிகுறி என்ன தெரியுமா?

Disclaimer