$
Effects Of Menopause On Women's Health: மெனோபாஸ் என்ற நிலையானது பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது ஏற்படும் நிலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாதவிடாய் வருவதை நிறுத்துகிறது. இது பெண்களுக்கு 45 முதல் 55 வயதை அடையும் போது தோன்றும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அனைத்து மாற்றங்களும் இயல்பானவை ஆகும்.
ஆனால், இந்த கால கட்டத்தில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை சரியான நேரத்தில் கவனிக்கப்படுவது அவசியம் ஆகும். இந்த மாற்றங்களைக் குறித்து குர்கான், ஆரா ஸ்பெஷாலிட்டி கிளினிக்கின் இயக்குநரும், கிளவுட் நைன் மருத்துவமனையின் மூத்த ஆலோசகருமான டாக்டர் ரிது சேதி அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Leg Pain During Periods: பீரியட்ஸ் டைம்ல கால்வலி வருதா? இது எல்லாம் தான் காரணமாம்
மெனோபாஸ் நிலையில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
மெனோபாஸ் நிலையில் பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் காணலாம்.
அடிக்கடி அமைதியிழப்பு
மெனோபாஸ் நிலையின் போது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில், இரவில் வியர்த்தல், ஒழுங்கற்ற மாதவிடாய், சூடான ஃப்ளாஷ்கள் போன்றவை அடங்கும். இவை உடலில் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதனால், தூக்கம் போன்ற அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும். இவை உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவும் ஹைபோதாலமஸில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையவையாகும்.

ஹார்மோன் மாற்றங்கள்
மெனோபாஸ் பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். இது பெண்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நிகழ்கிறது. இந்த மெனோபாஸ் நிலையின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான் என்ற ஹார்மோன் அளவு குறையத் தொடங்கலாம். இதனால், உடலில் பல்வேறு உடல் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. மேலும், இந்நிலையில் உடல் உஷ்ணம், ஒழுங்கற்ற மாதவிடாய், இரவில் வியர்த்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு பலவீனமடைதல்
உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எலும்பின் அடர்த்தியைப் பாதிக்கலாம். ஏனெனில், மெனோபாஸ் காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையலாம். இதன் காரணமாக பெண் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் ஏற்படலாம். மேலும், எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்பு முறிவு, மற்றும் காயங்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Period Pain Tips: பெண்களே.! மாதவிடாய் அசௌகரியத்தைக் குறைக்க நீங்க ஃபாலோப் பண்ண வேண்டியது இது தான்.
மனம் அலைபாயுதல்
உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், மெனோபாஸ் நிலை நம் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் பல்வேறு உளவியல் மாற்றங்கள் வருகிறது. இதில் எரிச்சல், மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் பதட்டம் போன்ற மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள் அடங்கும். அதே சமயம், இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாழ்க்கையில் மற்ற காரணிகளுடன் இணைந்து, உணர்ச்சி ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

பிறப்புறுப்பு ஆரோக்கியத்தில் மாற்றம்
மெனோபாஸ் காலத்தில் பிறப்புறுப்பு மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் மாற்றங்கள் பொதுவானவை. இந்த சூழ்நிலையில் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவது, ஈரப்பதம் குறைவு, பிறப்புறுப்பு சுவர் மெலிதல், உடலுறவின் போது சிரமம் உண்டாகுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். அதே நேரம் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுக்கள் உண்டாகலாம்.
இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு
இதய ஆரோக்கியத்திற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இதன் குறைபாடு இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். இது தவிர, இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் கொலஸ்ட்ரால் அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பதன் மூலம், இதய ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும்.
இந்த வகை மெனோபாஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கையாள வேண்டியது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version