Doctor Verified

Bone Health Strengthening Tips: மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் மூட்டு வலி. எப்படி தவிர்ப்பது?

  • SHARE
  • FOLLOW
Bone Health Strengthening Tips: மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் மூட்டு வலி. எப்படி தவிர்ப்பது?

இந்த நிலை பெரும்பாலும் நாற்பது வயதுக்குப் பிறகே தொடங்குகிறது. சிலருக்கு 30 வயதுக்குப் பின் தொடங்கலாம். இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜ குறைவால் காரணமாக கொழுப்பு அளவு அல்லது எலும்பு அடர்த்தியில் மாற்றங்கள் உண்டாகலாம். பெரிமெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதிப்பதற்கு முக்கிய காரணம் புரோஜஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்படுவதே ஆகும். மேலும் இதில் எலும்பு அடர்த்தி குறைக்கப்பட்டு எலும்புகள் பலவீனமடையலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Pepper Benefits: பெண்கள் கருமிளகு சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

பெரிமெனோபாஸ் காலத்தில் எலும்பு ஆரோக்கியம்

பெரிமெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு பாதிப்பு குறித்து டெல்லி அப்பல்லோ கிளினிக்கின் பொது மருத்துவர் டாக்டர் யாஸ்மின் யூசுப்சாய் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “பெண்களின் வயதுக்கு ஏற்ப எலும்புகள் பலவீனமடையலாம். இதனால் ஆஸ்டியோமலாசியாவால் பாதிக்கப்படலாம். இது அவர்களின் எலும்புகளை பலவீனமடையலாம்.

பெண்கள் தங்கள் எலும்பு பலவீனமடைவதைத் தவிர்க்க கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த ஊட்டச்சத்துக்களைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை எலும்புகளை வலுப்படுத்துவதுடன், எலும்பு வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இதில் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. பெரிமெனோபாஸ் காலத்தில் பெண்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கையாள வேண்டும்” என கூறியுள்ளார்.

எலும்பு ஆரோக்கியம் பெற உதவும் வழிமுறைகள்

வைட்டமின் டி உட்கொள்வது

பெண்கள், மாதவிடாய் நிறுத்த காலத்தில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வைட்டமின் டியை உட்கொள்ளலாம். இது உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதில் கொழுப்பு நிறைந்த மீன், முட்டை மஞ்சள் கரு, பால் மற்றும் காளான் போன்ற உணவுகளை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

கால்சியம் உட்கொள்வது

பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளைக் குறைக்க கால்சியம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தங்கள் உணவில் பாலாடைக்கட்டி, தயிர், பாதாம் மற்றும் பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இது மூட்டு வலி பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Basil Seeds During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் துளசி விதை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள்

மாதவிடாய் காலத்தில் பெண்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும். அந்த வகையில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் சேர்க்கலாம். இதைச் செய்வதன் மூலம், எலும்பு ஆரோக்கியம் மேம்படுத்தப்படுவதுடன், உடல் வலியைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் வயதாகும் போது எலும்பு முறிவு அபாயமும் குறைக்கலாம்.

வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளுதல்

இந்த காலகட்டத்தில் பெண்கள் தங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வழக்கமான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சில சமயங்களில் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

பெரிமெனோபாஸ் காலகட்டத்தில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க பெண்கள் இந்த குறிப்புகளை பின்பற்றலாம். எனினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின் இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Drinks During Periods: மாதவிடாய் வலி சீக்கிரம் குறைய இந்த பானங்களை குடிங்க

Image Source: Freepik

Read Next

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்களுக்கு மெனோபாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு அர்த்தம்

Disclaimer