Sat Sep 12, 2026 | 12:10 AM IST

Doctor Verified

Basil Seeds During Pregnancy: கர்ப்பிணி பெண்கள் துளசி விதை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

Tulsi Seeds Benefits For Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியம் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இந்த காலகட்டத்தில் தங்கள் உணவில் சத்தான பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் பலனளிக்கும். இந்நிலையில் பெண்கள் தினசரி உணவில் கொட்டைகள் மற்றும் விதைகள், குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அதே சமயம், கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உணவில் சேர்க்கப்படும் பொருள்களின் சரியான அளவை அறிந்து கொள்வது அவசியமாகும். அதன் படி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு துளசி விதைகள் என்னென்ன நன்மைகள் தரும் என்பது குறித்து உணவியல் நிபுணர் ஷிவாய் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் அபாயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Period Twice a Month: மாதத்தில் இருமுறை மாதவிடாய் வருவது நல்லதா.? என்னனு தெரிஞ்சிக்கோங்க.

துளசி விதைகளின் ஊட்டச்சத்துக்கள்

துளசி விதைகளில் கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சோடியம், வைட்டமின் பி6, ஃபோலேட், கலோரிகள், நார்ச்சத்து, இரும்பு, சர்க்கரை மற்றும் நீர் போன்றவை காணப்படுகின்றன. இது பெண்களுக்கு மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. கூடுதலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் துளசி விதைகளை ஊற வைத்து சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் துளசி விதைகளின் நன்மைகள்

கர்ப்பிணி பெண்கள் துளசி விதைகள் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செரிமானப் பிரச்சனை காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம். இது தவிர, உணவில் நார்ச்சத்து மற்றும் தண்ணீரை குறைவாக எடுத்துக்கொள்வதும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில் மலச்சிக்கல் உள்ள பெண்கள் துளசி விதையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

சருமம் மற்றும் முடிக்கு

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளைத் துளவி விதைகளால் எளிதில் தீர்க்கலாம். இது தவிர, இவை முடி வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும். மேலும் இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.

உடல் வெப்பத்தைத் தணிக்க

கர்ப்ப காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க துளசி விதைகள் உதவுகிறது. ஆயுர்வேதத்தில் கபா மற்றும் வாதத்தை சமநிலைப்படுத்த துளசி விதைகள் சிறந்த தீர்வாகும்.

அமிலத்தன்மையைக் குறைக்க

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனைகள் உண்டாகலாம். இது கருப்பையில் கரு வளரும்போது, பெண்களின் செரிமான அமைப்பை பாதிக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் அமிலத்தன்மை பிரச்சனையை சந்திப்பர். இதற்கு துளசி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Gestational Diabetes Foods: கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு இந்த உணவெல்லாம் சாப்பிடுங்க.

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த

பெண்கள் பலர் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் அவதிப்படுகின்றனர். இதற்கு துளசி விதைகள் மூலம் நிவாரணம் பெறலாம். கர்ப்பிணி பெண்கள் இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலில் குளுக்கோஸ் அளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

துளசி விதைகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்

துளசி விதைகளில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. எனினும், கர்ப்ப காலத்தில் மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதனை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் துளசி விதைகள் அதிகம் சாப்பிடுவது, உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும். இதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் சிறு கவனக்குறைவும் தாய் மற்றும் சேய் இருவதையும் பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தாய்ப்பால் நிறுத்திய பின் மார்பகம் வலிக்கிறதா? இது தான் காரணம்..

Image Source: Freepik

Read Next

இரவு நேரத்தில் அதிகமாக வியர்த்தால் காரணங்கள் இதுவாக இருக்கலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content