Is It Normal To Get Your Period Twice a Month: பொதுவாக பெண்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம். சில நேரங்களில் சில பெண்களுக்கு மாதவிடாய் 15 நாள்களுக்கு ஒரு முறை வரலாம். இது எப்போதாவது நடந்தால், அது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இது போல 15 நாள்களுக்கு ஒரு முறை வருவதில் சிக்கல்கள் உள்ளது. மருத்துவரின் கூற்றின்படி, சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாள்களாகும். இதில் சில பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரமாகவும், சிலருக்கு தாமதமாகவும் ஏற்படலாம். இது எல்லா பெண்களுக்கும் வேறுபட்டதாகும்.
மாதத்திற்கு இருமுறை மாதவிடாய் ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இந்நிலையைக் கொண்ட பெண்கள் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். ஏனெனில், இந்த பிரச்சனை மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்னும் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அப்படிப்பட்ட காரணங்கள் சிலவற்றைக் குறித்து லக்னோவிலுள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cramps: மாதவிடாய் வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!
மாதம் இருமுறை மாதவிடாய் வருவதற்கான காரணங்கள்
ஹார்மோன் சமநிலையின்மை
ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களால், மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் மாதவிடாய் ஏற்படும். இதற்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனையே காரனமாகும். இந்த சூழ்நிலையில் பெண்கள் மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
தைராய்டு
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படலாம். உண்மையில் மாதவிடாய் சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்களே முக்கிய பங்கு வகிக்கிறது. இவை தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தைராய்டு உள்ளவர்களுக்கு இந்த சுழற்சி பாதிக்கப்பட்டு இருமுறை மாதவிடாய் நிகழலாம். இதில் ஹைப்பர் தைராய்டிசத்தின் போது மாதவிடாய் சுழற்சி தாமதப்படுத்துகிறது. அதே போல, ஹைப்போ தைராய்டிசத்தில் மாதவிடாய் சுழற்சியின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம். இதன் காரணமாகவே, மாதம் இரு முறை மாதவிடாய் ஏற்படுகிறது.
மன அழுத்தம்
இன்றைய நவீன வாழ்க்கையில் வேலைப்பளு மற்றும் இன்னும் பிற காரணங்களால் மன அழுத்தத்தால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, மாதம் இரு முறை மாதவிடாய் பிரச்சனை ஏற்படலாம். உண்மையில் மன அழுத்தத்தால் ஹார்மோன்கள் சமநிலையற்று காணப்படும். இவையே மாதவிடாய் காலத்தில் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!
உடல் எடை காரணமாக
உடல் எடை அதிகரிப்பு அல்லது அதிக இழப்பு காரணமாக மாதவிடாய் ஒழுங்கின்மை ஏற்படலாம். இதில் எடை அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது உடலில் உள்ள ஹார்மோன்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம். இதன் காரணமாக, மாதத்திற்கு இரு முறை மாதவிடாய் நிகழலாம்.
பிறப்புறுப்பு தொற்று காரணமாக
பிறப்புறுப்பு தொற்று காரணமாகவும், மாதத்திற்கு இருமுறை மாதவிடாய் நிகழலாம். அந்த வகையில் யோனியில் ஏற்படும் வீக்கம், வறட்சி மற்றும் நிலையான ஈரம் போன்றவற்றால் மாதத்திற்கு இருமுறை மாதவிடாயை ஏற்படுத்தும்.
ஒழுங்கற்ற மாதவிடாயைக் குணப்படுத்துவதற்கான வழிகள்
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்கு சில தீர்வுகள் உள்ளன.
- இதில் முதலில் முடிந்தவரை மன அழுத்தத்திலிருந்து விலகி நிற்க வேண்டும்.
- மேலும், உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
- கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். சில யோகாசனங்கள் செய்து வருவதன் மூலம் மாதவிடாய் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு மாதத்தில் இருமுறை மாதவிடாய் பிரச்சனையைத் தவிர்க்க முடியும். அதன் பிறகும், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Leg Pain During Periods: பீரியட்ஸ் டைம்ல கால்வலி வருதா? இது எல்லாம் தான் காரணமாம்
Image Source: Freepik