Doctor Verified

Hot Water Bag: மாதவிடாய் வலியிலிருந்து நீங்க ஹாட் வாட்டர் பேக்.! எப்படி பயன்படுத்துவது?

  • SHARE
  • FOLLOW
Hot Water Bag: மாதவிடாய் வலியிலிருந்து நீங்க ஹாட் வாட்டர் பேக்.! எப்படி பயன்படுத்துவது?


Hot Water Bag For Period Pain: மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புகள், அஜீரணம், மோசமான செரிமானம் போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற எளிதான மற்றும் மலிவான வழியாக சூடான தண்ணீர் பையை பயன்படுத்தலாம். இதில் சூடான தண்ணீர் பாட்டில் அல்லது சூடான தண்ணீர் பையின் உதவியுடன், பெண்கள் வலியுள்ள பகுதியில் வைக்க, வலியிலிருந்து நிவாரனம் பெற முடியும்.

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை. எனவே மாதவிடாய் வலியைக் குறைக்க வெந்நீர் பையைப் பயன்படுத்தலாம். எனினும் வெந்நீர் பையைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் சரியான பயன்பாட்டின் மூலம் தசைப்பிடிப்பு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். இது குறித்து லக்னோவிலுள்ள ஜல்கரிபாய் மருத்துவமையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Painkiller During Periods: மாதவிடாய் வலி நீங்க மாத்திரையா? இது தெரிஞ்சா நீங்க எடுத்துக்க மாட்டீங்க.

மாதவிடாயின் போது வெந்நீர் பை பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் வெந்நீர் பையில் வெந்நீரை நிரப்பி வயிற்று வலி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
  • பாட்டிலில் தண்ணீரை நிரப்பி, பின் அதன் மூடியை சரியாக இறுக்கி, அதைப் பயன்படுத்தும் முன்னதாகச் சரிபார்க்க வேண்டும்.
  • பாட்டிலில் தொப்பி உள்ள பகுதியை தோலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். இல்லையெனில் பாட்டிலைத் திறந்தால் அதில் உள்ள சூடான நீர் சருமத்தை எரிக்கலாம்.
  • வெந்நீர் பையை நேரடியாக தோலில் வைப்பதற்குப் பதில், பருத்தித் துணியில் போர்த்தி, உடல் அல்லது தோல் பாகத்தில் வைக்கலாம்.
  • அதே சமயம், 10 முதல் 15 நிமிடங்களுக்கு வெந்நீர் பையைப் பயன்படுத்தி, தசைகள் நிவாரணம் பெறும் போது வெந்நீர் பை பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.

வெந்நீர் பையைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • வெந்நீர் பையில் அதிக வெந்நீரை நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக சூடான நீர் வலியைக் குறைப்பதற்குப் பதில், வலியை அதிகரிக்கலாம்.
  • சூடான தண்ணீர் பையில் அதிகம் நீர் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கனமான நீர்ப்பை வயிற்றில் அழுத்தம் கொடுப்பதுடன், வலியை அதிகரிக்கும்.
  • மேலும் சூடான நீர் பையை நீண்ட நேரம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வெந்நீர் பையின் வெப்பநிலை சருமத்திற்கு மிக அருகில் இருந்தால், சொறி பிரச்சனை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!

Image Source: Freepik

Read Next

PCOS பிரச்னையால் முடி கொட்டுதா? சூப்பர் டிப்ஸ் இங்கே..

Disclaimer