பீரியட்ஸின் போது இடுப்பு, தொடை வலியால் அவதியா? காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் இதோ

Pelvic pain and thigh pain during periods: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனை பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளில் வலி ஏற்படுகிறது. இதில் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய இடுப்பு மற்றும் தொடை வலி எதனால் ஏற்படுகிறது என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பீரியட்ஸின் போது இடுப்பு, தொடை வலியால் அவதியா? காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் இதோ

Prevention tips of pelvic floor and thigh pain during periods: பெண்கள் பலருக்கும் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் காரணமாக பல அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர். இந்த காலகட்டத்தில் கால்வலி, இடுப்பு வலி, அடிவயிற்று வலி உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கக் கூடும். இந்த நாள்களில் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த மாற்றங்களினால் மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் வலி ஏற்படக்கூடும்.

இந்த வலி மிகவும் கடுமையானதாக இருப்பதால், இந்த நேரத்தில் பெண்கள் அன்றாட வேலைகளைச் செய்வதில் கூட சிரமப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய இடுப்பு வலி மற்றும் தொடை வலி எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் குறித்தும், அதிலிருந்து விடுபடும் முறைகள் குறித்தும் சாய் பாலிகிளினிக்கின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் விபா பன்சால் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாகக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனையால் பெண்கள் உடலில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

மாதவிடாய் காலத்தில் இடுப்புத் தளம் மற்றும் தொடை வலி ஏற்படுவதற்கான காரணங்கள்

நார்த்திசுக்கட்டிகள்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கருப்பையில் ஃபைப்ராய்டுகள் அதாவது கட்டிகள் இருப்பது வலியை அதிகரிக்கிறது. இந்த கட்டிகளானது கருப்பை தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தொடை மற்றும் இடுப்புத் தளத்தில் வலியை ஏற்படுத்தும். மேலும், கடுமையான ஃபைப்ராய்டு பிரச்சனை மாதவிடாயின் போது கடுமையான வலி மற்றும் அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.

எண்டோமெட்ரியோசிஸ்

எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையின் உட்புற திசுக்கள் உடலுக்கு வெளியே வளரக்கூடிய ஒரு நிலையாகும். இது கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தக்கூடும். மாதவிடாய் சமயத்தில் இந்த வலி அதிகரிக்கலாம். இந்நிலையில், நரம்புகள் மற்றும் இடுப்புத் தள தசைகள் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வலி தொடையிலிருந்து முதுகு வரை பரவலாம்.

அதிக அளவு புரோஸ்டாக்லாண்டின்கள்

புரோஸ்டாக்லாண்டின்கள் ஆனது கருப்பையின் தசைகள் சுருங்குவதற்கு காரணமான ஹார்மோன்களைக் குறிக்கிறது. இதன் அளவு அதிகமாக இருக்கும் போது, அது அதிக சுருக்கங்களை ஏற்படுத்தி, வயிற்றில் மட்டுமல்லாமல், தொடைகள் மற்றும் இடுப்புத் தளத்திலும் வலியை ஏற்படுத்தலாம். இந்நிலையில், அதிகளவிலான புரோஸ்டாக்லாண்டின்கள் மாதவிடாயின் ஆரம்ப நாட்களில் வலியை ஏற்படுத்துகிறது.

மாதவிடாயின் போது கருப்பை சுருக்கங்கள்

பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் கருப்பையின் தசைகள் சுருங்குவதன் காரணமாக, கருப்பைகள் கருவுறாத முட்டைகளையும், கருப்பையின் உட்புறத்தையும் வெளியேற்றுகிறது. இந்த சுருக்கம் சில நேரங்களில் இடுப்புத் தள தசைகள் வரை நீண்டு, வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த சுருக்கத்தின் காரணமாக வலி தொடைகள் வரை கூட பரவக்கூடும்.

மாதவிடாய் காலத்தில் இடுப்புத் தளம் மற்றும் தொடை வலியைத் தடுப்பது எப்படி?

லேசான பயிற்சிகள் மற்றும் நீட்சிப்பயிற்சி

யோகா, நடைபயிற்சி மற்றும் நீட்சி போன்ற லேசான உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது தசை பதற்றத்தைக் குறைக்க உதவுகிறது. அதன் படி, தொடைகள் மற்றும் இடுப்புத் தள தசைகளைத் தளர்த்த உதவும் 'பாலசனா' மற்றும் 'சுப்த பத்தகோனாசனா' போன்ற யோகாசனங்களைப் பயிற்சி செய்யலாம்.

நீரேற்றம் மற்றும் சமநிலையான உணவுமுறை

போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கலாம். மேலும், இது தசைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, மாதவிடாய் வலியைக் குறைப்பதற்கு கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் நட்ஸ் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: 15 நாள்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஆகுரீங்களா? அதற்கு என்ன காரணம் தெரியுமா? இதோ மருத்துவர் தரும் விளக்கம்

வெப்ப சிகிச்சை

சூடான தண்ணீர் பாட்டில் அல்லது வெப்பமூட்டும் திண்டு பயன்படுத்துவதன் மூலம் இடுப்பு மற்றும் தொடை தசைகளைத் தளர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெப்ப சிகிச்சையானது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் தசை பதற்றத்தைக் குறைத்து வலியைக் குறைக்க வழிவகுக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் சூடான அமுக்கத்தைப் பயன்படுத்துவது மிகுந்த நிவாரணத்தை அளிக்கிறது.

மசாஜ் சிகிச்சை

மாதவிடாய் வலிக்கு மசாஜ் சிகிச்சை மேற்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் மற்றும் இடுப்புத் தள தசைகளில் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குறிப்பாக, லாவெண்டர், புதினா மற்றும் கெமோமில் போன்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த எண்ணெய்கள் மிகவும் நன்மை பயக்கும்.

மாதவிடாய் காலத்தில் இடுப்புத்தளம் மற்றும் தொடைகளில் வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக அமைகிறது. ஆனால், இதைப் புறக்கணிக்கக்கூடாது. எனவே இந்த வலிக்கான காரணங்களைப் புரிந்துகொண்டு, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் வலியைக் குறைக்கலாம். மேலும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய வலியை உடற்பயிற்சி, சரியான உணவுமுறை மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். எனினும், வலி கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ, மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பிறகு வரும் முதல் பீரியட்ஸ்.. மருத்துவர் சொன்ன இந்த தகவல்களை நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Image Source: Freepik

Read Next

கருப்பைச் சரிவுக்கான காரணங்கள் என்ன தெரியுமா? அதன் தடுப்பு முறைகள் இதோ

Disclaimer