Things to know about first period after delivery: மாதவிடாய் மற்றும் பிரசவம் இரண்டுமே ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்நாளில் சந்திக்கக்கூடிய நிகழ்வாகும். மாதவிடாய் காலம் பெண்களுக்கு ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை இருக்கலாம். சில பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனை இருக்கலாம். இந்தக் காலம் ஒரு வாரம் வரை கூட இருக்கலாம். இதில் ஒருவர் கர்ப்பமாக இருந்து, விரைவில் பிரசவம் நடக்கப் போகிறீர்கள் என்றால், பிரசவத்திற்குப் பிறகு முதல் மாதவிடாய் தொடர்பான முக்கியமான விஷயங்களைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மாதவிடாய் வருவது, அவை சாதாரண மாதவிடாய் சுழற்சியிலிருந்து வேறுபடுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு முதல் முறையாக மாதவிடாய் வரும்போது, வழக்கத்தை விட அதிக வலி மற்றும் இரத்தப்போக்கை அனுபவிக்கலாம். ஆனால் இதன் அறிகுறிகள் அதிகரித்தால், மருத்துவரை அணுகுவது அவசியமாகும். குறிப்பாக, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை பேடை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு, முதல் மாதவிடாய் ஏற்படும் முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஜல்காரிபாய் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்:
பிரசவத்திற்குப் பிறகு வரும் முதல் மாதவிடாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை
பிரசவத்திற்குப் பிறகு முதல் முறையாக எப்போதுமாதவிடாய் வரும்
பிரசவத்திற்குப் பிறகு 45 முதல் 90 நாட்களுக்குள் முதல் மாதவிடாய் ஏற்படலாம். இந்நிலையில், தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகு ஆறு மாதங்களுக்குப் பிறகும் முதல் மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சந்தர்ப்பங்களில், இதற்கு அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பிரசவத்திற்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே மாதவிடாய் வந்து விடலாம். தாய்ப்பால் கொடுப்பது மாதவிடாய் சுழற்சியுடன் நேரடியாக தொடர்புடையதாகும். ஏனெனில், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடலில் புரோலாக்டின் ஹார்மோன் உற்பத்தியாகிறது.
இது இனப்பெருக்க ஹார்மோன்களைப் பாதிப்பதால் மாதவிடாய் சரியான நேரத்தில் வரும். ஆனால், தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு மாதவிடாய் சீக்கிரமாக வராமல் போகும் பிரச்சனை ஏற்படலாம். பிரசவத்திற்குப் பின் முதல் மாதவிடாய் காலத்தில் அதிக பிடிப்புகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் இரத்தக் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. இது கருப்பையின் அடுக்குகளின் வளர்ச்சியால் நிகழலாம். இந்த அடுக்குகள் பிரசவத்திற்குப் பின் அகற்றப்படுகிறது. னவே அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படலாம். பல பெண்களுக்கு இரத்த ஓட்டமும் குறையவும் கூடும்.
மாதவிடாய் காலத்தில் வெளியேற்றத்திற்கும் இரத்தப்போக்கிற்கும் உள்ள வித்தியாசம்
பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக கருப்பையிலிருந்து வெளியேறும் வெளியேற்றமானது, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கிலிருந்து வேறுபட்டதாகும். இது பிரசவத்திற்குப் பிறகு உட்புறப் புறணியிலிருந்து வெளியேறும் வெளியேற்றத்தைக் குறிக்கிறது. பொதுவாக, இது சளி அல்லது யோனி வெளியேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வெளியேற்றத்தின் நிறம் சிவப்பு, பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் இருக்கலாம். எனவே பிரசவத்திற்குப் பின் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், மருத்துவர் அளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியமாகும். மேலும் பிறப்புறுப்புப் பகுதியில் அதிக இரத்தப்போக்கு, கடுமையான வலி, காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் அதன் அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது.
இந்த பதிவும் உதவலாம்: கருக்கலைப்புக்குப் பிறகு கர்ப்பமானால் பல பிரச்னைகள் வரும்.. ஏன் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..
பிரசவத்திற்குப் பிறகு மாதவிடாய் காலத்தில் தொற்றுநோயைத் தவிர்க்க வேண்டும்
ஒவ்வொரு பெண்ணின் உடல் அமைப்பும் வித்தியாசமானது என்பதால், மாதவிடாய்க்கான நிலையான நேரத்தைச் சொல்வது கடினம் ஆகும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாதவிடாய் சுழற்சிகள் பிரசவத்திற்குப் பிறகு 6 முதல் 8 வாரங்களுக்குள் தொடங்கலாம். எனவே, பிரசவத்திற்குப் பின் முதல் மாதவிடாய் காலத்தில் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் காய்ச்சல் ஏற்பட்டாலோ அல்லது துர்நாற்றம் வீசும் வெளியேற்றம் இருந்தாலோ அது தொற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
இதைத் தவிர்ப்பதற்கு, மருத்துவர் பாக்டீரியா எதிர்ப்பு அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை வழங்கலாம். மேலும், சிறுநீர் கழிக்கும் போது வலி, தலைவலி அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இந்த அறிகுறிகள் அனைத்துமே மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தொற்றுகளுக்கான வலியைக் குறிக்கிறது என்றால், அதைக் குணப்படுத்த மருத்துவ உதவியை நாட வேண்டும். இதனுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். இதில் நார்ச்சத்துக்களைச் சேர்க்க வேண்டும். அதே சமயம், பிரசவத்திற்குப் பிறகு அதிகமாக வறுத்த உணவை சாப்பிட வேண்டாம்.
பிரசவத்திற்குப் பிறகு முதல் மாதவிடாயின் போது வலி ஏற்படலாம்
சமீபத்தில் ஒரு பிரசவம் நடந்திருந்தால் அல்லது பிரசவம் நடக்கவிருந்தால், பிரசவத்திற்குப் பிறகு நடக்கக் கூடிய விஷயங்களில் ஒன்றாக இந்த மாதவிடாய் அமைகிறது. ஆனால், இது தாங்கக்கூடியதை விட அதிக வலியைத் தாங்க வேண்டியிருக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிக இரத்தப்போக்கு இருக்கலாம், இது வழக்கத்தை விட அதிகமாக காணப்படலாம். இதில் பிரசவத்தின் போது முதல் முறையாக மாதவிடாய் ஏற்படும் போது, அதன் ஓட்டம் அசாதாரணமாக இருக்கலாம்.
இதனுடன், இந்த நேரத்தில் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரசவத்திற்குப் பிறகு முதல் முறையாக மாதவிடாய் வரும்போது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நல்ல ஓய்வு பெற வேண்டும். மேலும், வலி ஏற்பட்டால் சூடான தண்ணீர் பாட்டிலைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cup பயன்படுத்துவது கருவுறுதலைப் பாதிக்குமா.? டாக்டரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்..
புறக்கணிக்கக்கூடாத அறிகுறிகள்
பிரசவத்திற்குப் பிறகு மாதவிடாய் தொடர்பான இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. பிரசவத்திற்குப் பிறகு முதல் முறையாக மாதவிடாய் ஏற்படுவது சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கலாம். ஆனால், இந்த காலத்தில் நாம் புறக்கணிக்கக் கூடாத சில சிறப்பு அறிகுறிகள் உள்ளது. அதில் ஒன்றாக மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுவது.
இதில் அதிகப்படியான இரத்தப்போக்கைக் கண்டால், அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை பேடை மாற்ற வேண்டியிருந்தால், அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பது அர்த்தம். இந்நிலையில், ஒருவர் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தவிர, இரத்தப்போக்கு அதிகமாக இருப்பின், இரத்தக் கட்டிகள் அதிக அளவில் உருவாகி, காய்ச்சல் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில், இவை கட்டியின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒரு சில நேரங்களில் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையில் நிகழ்கிறது. இது தவிர, தொற்று காரணமாக மாதவிடாய் ஓட்டமும் அதிகமாக வாய்ப்புள்ளது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? இதை நிர்வகிக்க உதவும் குறிப்புகள் இதோ
Image Source: Freepik