Why am i getting periods in 15 days: மாதவிடாய் என்பது பெண்கள் மாதந்தோறும் சந்திக்கக்கூடிய ஒரு நிகழ்வு ஆகும். ஆனால் பெண்கள் பலரும் மாதவிடாய் தொடர்பான பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயைச் சந்திக்கின்றனர். இதில் தாமதமான மாதவிடாய் அல்லது மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் எழலாம். ஆம். உண்மையில் பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்களின் மாதவிடாய் சுழற்சி 15 நாட்கள் வரை நீடிக்கலாம். பொதுவாக பெண்களின் மாதவிடாய் 22 முதல் 38 நாள்கள் வரை இருக்கலாம். ஆனால், இது ஏன் நடக்கிறது என்பது பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
சில பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரமாகவோ அல்லது 15-15 நாட்களுக்குள் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றி தெரிவதில்லை. இது குறித்து லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் கருவுறுதல் நிபுணர், மூத்த மகளிர் மருத்துவ நிபுணர், டாக்டர் வைஷாலி சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மருத்துவரின் கூற்றுப்படி, “ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மாதவிடாய் ஏற்படுவது ஒரு தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே எந்தவொரு பெண்ணும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் இது அவர்களின் உடல்நலத்தில் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்” எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் காலத்தில் உங்கள் வயிறு சுத்தமாகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
15 நாள்களில் மாதவிடாய் வருவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
15 நாள்களுக்கு ஒரு முறை மாதவிடாய் பிரச்சனையைச் சந்திப்பதால், பெண்களுக்கு இரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
இது பெண்களின் அண்டவிடுப்பை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், அவர்களுக்கு அண்டவிடுப்பைக் கண்காணிப்பது கடினமாக இருக்கலாம்.
மேலும், இது கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
முக்கிய கட்டுரைகள்
15 நாள்களில் மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணங்கள்
பெண்களுக்கு மாதவிடாய் ஆனது 15 நாள்களில் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவர் கூறியுள்ளதைக் காண்போம். அவரின் கூற்றுப்படி, "சில நேரங்களில் கருப்பையில் உள்ள ஒரு சிறிய நீர்க்கட்டி, ஃபோலிக்கிள் என்று அழைக்கப்படுகிறது. இது மாதவிடாய் சீக்கிரம் வருவதற்கு காரணமாகலாம். இது ஆரம்பகால இரத்தப்போக்குக்கு பங்களிக்கிறது. இதன் காரணமாகவே, மாதத்திற்கு இரண்டு முறைக்கு மேல் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டிகள் ஆனது எண்டோமெட்ரியம் ஃபோலிக்கிள்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கட்டிகள் அறுவை சிகிச்சை உதவியுடன் சிகிச்சையளிக்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
இது தவிர, ஒரு பெண்ணின் கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கலாம். இதன் காரணமாக, பெண்களுக்கு ஒரு மாதத்தில் 2 முறை மாதவிடாய் ஏற்படுவதற்கும் காரணமாகலாம்.
மேலும் கருப்பையில் ஏதேனும் நீர்க்கட்டி அல்லது கட்டி இருப்பின், ஹார்மோன்களின் சமநிலை மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகிறது. இது மாதவிடாய் சுழற்சியைப் பாதிப்பதுடன், அடிக்கடி மாதவிடாய் ஏற்பட வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: சரியான நேரத்துல பீரியட்ஸ் ஆகாம கஷ்டமா இருக்கா? இந்த ஹெர்பல் டீ உங்களுக்கு உதவும்
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
டாக்டர் வைஷாலி அவர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு முறையில் சீக்கிரமாக மாதவிடாய் வருவது கவலைக்குரிய விஷயம் அல்ல. ஆனால், ஒரு பெண் தொடர்ந்து இந்த சூழ்நிலையை எதிர்கொள்பவராக இருப்பின், அவர்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. எனினும் வேறு சில அறிகுறிகளைக் கவனித்தால், நிச்சயமாக மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.
வேறு சில அறிகுறிகள்
15 நாள்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படுவதற்கு வேறு சில அறிகுறிகள் ஏற்படலாம்.
- மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு
- மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட அதிக வலி ஏற்படுவது
- இரத்தப்போக்கின் போது கருப்பு கட்டிகள் தோன்றுவது
- உடலுறவின் போது வலி
- இரத்தப்போக்கின் போது புள்ளிகள்
- அடிவயிற்றின் கீழ் வலி
மாதம் இருமுறை மாதவிடாயைச் சந்திப்பவர்கள் இது போன்ற ஏராளமான அறிகுறிகளைச் சந்திக்கலாம். இந்நிலையில், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: உடனே பீரியட்ஸ் ஆகணுமா? இஞ்சியை இப்படி எடுத்துக்கோங்க.. நிபுணர் தரும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik