இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. மருத்துவர் சொல்லும் கருப்பை கட்டியின் அறிகுறிகள் இதோ

Symptoms of having tumor in uterus: பல்வேறு காரணங்களால் பெண்கள் பலரும் கருப்பையில் கட்டி பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால், சில அறிகுறிகள் தோன்றலாம். இதில் கருப்பையில்  கட்டி இருப்பதால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. மருத்துவர் சொல்லும் கருப்பை கட்டியின் அறிகுறிகள் இதோ

Symptoms of a lump in the uterus: பெண்ணின் உடலில் காணப்படக்கூடிய ஒரு முக்கிய உறுப்பாக கருப்பை அமைகிறது. கருப்பை ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, பெண்களுக்கு சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு, கரு அதில் வளரும். கருப்பையின் வடிவமானது ஓரளவு பேரிக்காய் போன்று காணப்படும். ஆனால் பல்வேறு காரணங்களால் பெண்களின் கருப்பையில் கட்டி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். இந்த கருப்பை கட்டியை சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம், கடுமையன நோய்களைத் தவிர்க்கலாம்.

உடல் பருமன், இடுப்பு வலி, ஹார்மோன் மாற்றங்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் மற்றும் மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கருப்பையில் கட்டி உருவாகலாம். பொதுவாக, 25 முதல் 40 வயது வரை பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில், இது மரபணு ரீதியாகவும் ஏற்படலாம். கருப்பையில் காணப்படக்கூடிய ஒரு கட்டடி நீர்க்கட்டி அல்லது கருப்பை நார்த்திசுக்கட்டிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிகள் ஆனது புற்றுநோயை ஏற்படுத்தாது. பெண்களுக்கு கருப்பையில் கட்டில் இருக்கும் போது அறிகுறிகள் குறித்து சாரதா கிளினிக்கின் மருத்துவர் டாக்டர் கே.பி. சர்தானா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலவற்றைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Food For Uterus Health: கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்க பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

கருப்பையில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள்

எப்போதும் வயிறு கனமான உணர்வு

கருப்பையில் கட்டி இருப்பின், பெண்ணின் வயிறு எப்போதும் கனமாக இருக்கும். இதனால், பெண்களுக்கு வயிறு வீங்கியதாகவும், பெரியதாகவும் காணப்படும். சில சமயங்களில், வயிற்றில் கனமாக உணர்தலுடன், அடிவயிற்றின் கீழ் பகுதியில் லேசான வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த வலியானது அந்தப் பகுதியில் உள்ள கட்டியின் அழுத்தம் காரணமாக ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், இந்த அறிகுறியை பொதுவானதாகக் கருதி தவிர்க்கக் கூடாது.

சிறுநீர் கழித்தலில் பிரச்சனைகள்

கருப்பையில் கட்டி இருப்பின், பெண்களுக்கு சிறுநீர் பிரசனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், பெண்கள் எப்போதும் சிறுநீர்ப்பைப் பாதையில் அழுத்தத்தை உணர்கின்றனர். இதனால், அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய நிலை உண்டாகிறது. பல சமயங்களில், கட்டியின் வளர்ச்சி காரணமாக அவ்வப்போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

கீழ் முதுகில் வலி ஏற்படுவது

கருப்பையில் கட்டி இருப்பதன் மற்றொரு அறிகுறியாக, பெண்களுக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலி அவ்வப்போது ஏற்படக்கூடியதாகும். சில சமயங்களில் இந்த கடுமையான வலியானது முழு முதுகுக்கும் பரவ வாய்ப்புள்ளது. சில நேரங்களில் இந்த வலி மிகவும் அதிகரித்து, அன்றாட வேலைகளைச் செய்வது கூட கடினமாக்கி விடலாம். எனவே, இந்த அறிகுறியையும் சாதாரணமாகக் கருதாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Lump In Uterus: பெண்களே உஷார்! இந்த அறிகுறிகள் கருப்பையில் கட்டி இருப்பதை கூறுகிறதாம்!

மலச்சிக்கல் ஏற்படுவது

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் கட்டியின் காரணமாக மலசிக்கல் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், ஒரு பெண் மலச்சிக்கலால் அவதிப்படும்போது, அவளுடைய வயிறு சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால், அவர்கள் புத்துணர்ச்சியையும் உணருவதில்லை. எனவே மலச்சிக்கல் காரணமாக, பெண்கள் வாய்வு தொடர்பான பிரச்சனையைச் சந்திக்கின்றனர்.

அதிகப்படியான இரத்தப்போக்கு

கருப்பையில் கட்டி இருந்தால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்படலாம். இவ்வாறு அதிகப்படியான இரத்தப்போக்கு காரணமாக, பெண்கள் உடல் சோர்வு, பலவீனம் மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டால் பெண்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமாகும். சில சமயங்களில் இந்த காலநிலையில் வெள்ளைப்படுதல் பிரச்சனையும் ஏற்படலாம்.

கருப்பையில் கட்டி இருக்கும் போது இந்த அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. எனினும், பெண்கள் இது போன்ற அறிகுறிகளைச் சந்திக்க நேர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Vaginal Health: கருப்பை தொற்று ஏற்பட்டால் என்ன சாப்பிடணும்? டயட் டிப்ஸ் இதோ!

Image Source: Freepik

Read Next

PCOS-ஆல் ஏற்படும் தொப்பை கொழுப்பு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற.. இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..

Disclaimer