Uterine Fibroids: பெண்களே இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க… உங்க உயிருக்கே ஆபத்தாகலாம்!

  • SHARE
  • FOLLOW
Uterine Fibroids: பெண்களே இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க… உங்க உயிருக்கே ஆபத்தாகலாம்!


இது தவிர, கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இன்றைய காலத்தில் பெண்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சினைகளாகிவிட்டது. கருப்பை தொற்று, கருப்பை பாதிப்பு, கருப்பை கட்டி அல்லது வீக்கம் மற்றும் வலி போன்ற பல பிரச்சனைகள் இதில் அடங்கும். ஆனால் ஒரு பெண் தனது கருப்பையில் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால், அவர் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Painkiller During Periods: மாதவிடாய் வலி நீங்க மாத்திரையா? இது தெரிஞ்சா நீங்க எடுத்துக்க மாட்டீங்க.

கருப்பை பிரச்சனைக்கு விரைவாக சிகிச்சையளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது தீவிரமாகலாம். உரிய சிகிச்சை எடுக்காவிவிட்டால், கருத்தரிப்பதில் சிரமம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.

கருப்பையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதன் அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். கருப்பையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று பல பெண்களுக்கு கேள்வி எழும். அதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : Period Pain Tips: பெண்களே.! மாதவிடாய் அசௌகரியத்தைக் குறைக்க நீங்க ஃபாலோப் பண்ண வேண்டியது இது தான்.

கருப்பை பிரச்சனையின் அறிகுறிகள் என்னென்ன?

  • அசாதாரண அல்லது கடுமையான யோனி இரத்தப்போக்கு.
  • வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல்.
  • ஒழுங்கற்ற மாதவிடாய்.
  • இடுப்பு அல்லது அடிவயிற்றில் வலி.
  • கருப்பை பகுதியில் வலி.
  • யோனி வீக்கம் அல்லது வலி.
  • உடலுறவின் போது வலி

இந்த பதிவும் உதவலாம் : Hot Water Bag: மாதவிடாய் வலியிலிருந்து நீங்க ஹாட் வாட்டர் பேக்.! எப்படி பயன்படுத்துவது?

மருத்துவர்கள் கூறுவது என்ன?

எந்தவொரு பெண்ணும் இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இருப்பினும், பொதுவாக இத்தகைய அறிகுறிகள் சாதாரணமாக கூட இருக்கலாம். அவை 2-3 நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், நீண்ட காலமாக இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. ஏனென்றால், அது ஒரு தீவிர வடிவத்தை எடுக்கலாம். உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Salia Seeds For Female: பெண்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த ஒரு விதை போதும்.!

Disclaimer