Best Herbal Tea For Menstrual Cramps: மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். இதில் பல பெண்கள் மாதவிடாய் பிடிப்புகளில் சிக்கி தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வயிற்றில் வீக்கம் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவை ஏற்படலாம். இந்த சமயத்தில் பெண்கள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதன் படி மாதவிடாய் பிடிப்புகளைத் தவிர்க்க மூலிகை தேநீர் உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இது இயற்கையான முறையாகும். இந்த மூலிகை டீயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை மாதவிடாய் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகளை எதிர்கொள்ள அருந்த வேண்டிய சில மூலிகை டீ வகைகளைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Vaginal Itching: மாதவிடாய்க்குப் பின் பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்போ இதை செய்யுங்க!
மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் மூலிகை டீ
இலவங்கப்பட்டை டீ
PCOS பிரச்சனை கொண்டவர்கள், இலவங்கப்பட்டை டீ உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. இந்த இலவங்கப்பட்டை டீ தயார் செய்ய, முதலில் பாத்திரம் ஒன்றில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். இதில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து தேன் மற்றும் எலுமிச்சை சேர்க்க வேண்டும். இந்த டீயை 2 முதல் 3 முறை எடுத்துக் கொள்வதன் மூலம் மிகுந்த நிவாரணம் பெறலாம்.
கெமோமில் டீ
இது கெமோமில் என்ற பூவின் சாற்றிலிருந்து தயார் செய்யப்படுகிறது. இது மாதவிடாய் வலியைக் குறைத்து உடலை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. இதை உட்கொள்வது PMS பிரச்சனை கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இந்த டீ தயார் செய்ய, 2 டீஸ்பூன் கெமோமில் தண்ணீரில் கொதிக்க வைத்து, சுவைக்காக சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
இஞ்சி டீ
மாதவிடாய் பிடிப்புகளின் காரணமாக, வயிற்றில் வீக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இஞ்சி டீ தயார் செய்ய, இஞ்சியை வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனை உட்கொள்வதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Alcohol During Periods: மாதவிடாய் சமயத்தில் மது அருந்துவது சரியா? என்ன விளைவுகள் உண்டாகும் தெரியுமா?
கிரீன் டீ
கிரீன் டீயை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்கவும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. இது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. கிரீன் டீ தயார் செய்ய, 2 ஸ்பூன் பச்சை தேயிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் சுவைக்காக தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து அருந்தலாம்.
இந்த வழியில் மூலிகை டீயை அருந்துவது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ளவாறு வீட்டிலேயே எளிதான முறையில் தேநீர் தயார் செய்யலாம். இது தவிர, ஹீட்பேக்கை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bra For Sagging Breasts: தொய்வான மார்பகத்திற்கு எந்த ப்ரா சிறந்தது? அதை எப்படி அணிய வேண்டும்?
Image Source: Freepik