Doctor Verified

Blood Clots During Period: மாதவிடாயின் போது இரத்தம் உறைதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Blood Clots During Period: மாதவிடாயின் போது இரத்தம் உறைதல் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?


மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான செயல்முறையாகும். சிறுவயது சிறுமிகளுக்கு தொடங்கி 40 முதல் 45 அல்லது 50 வயது வரை இந்த சுழற்சி தொடர்கிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதில் மாதவிடாய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த நிலையில் பெண்கள் விறைப்பு, வயிற்று வலி அல்லது அதிகரித்த இரத்த ஓட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, மாதவிடாயின் ஆரம்ப நாள்களில் பல பெண்கள் கடுமையான வலியை அனுபவிக்கின்றனர். இந்த மாதவிடாய் இரத்த ஓட்டம், இரத்தம் உறைவு போன்றவை பெண்களுக்கு கடுமையான அனுபவத்தைத் தருகிறது. மாதவிடாய் காலங்களில் இரத்தம் உறைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் மாதவிடாயின் போது இரத்த உறைவுக்கான காரணங்கள் குறித்து டாக்டர் தனயா நரேந்திரன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மாதவிடாயின் போது இரத்த உறைவு ஏன் ஏற்படுகிறது?

மாதவிடாய் காலங்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படுவது பொதுவான ஒன்றாகும். இதில் இரத்தத்தை அடர்த்தியாக்கக் கூடிய புரதங்களை வெளியிடும் போது இரத்த உறைவு ஏற்படுகிறது. மேலும் கருப்பையின் புறணியில் உள்ள இரத்த நாளங்கள் அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுக்கிறது.

இந்த சூழ்நிலையில் மாதவிடாய்க்கு முன் அதாவது உடலை விட்டு இரத்தம் வெளியேறுவதற்கு முன் கருப்பை அல்லது புணர்புழையில் இரத்தம் குவிந்து இரத்தக் கட்டிகளை உருவாக்கலாம். டாக்டர் தனயா நரேந்திரன் அவர்களின் கூற்றுப்படி, உங்கள் மாதவிடாய் காலத்தில், கருப்பை உள்ளே உள்ள அடுக்கை வெளியேற்றுகிறது. இதுவே இரத்தக் கட்டிகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த இரத்த கட்டிகள் சிறிய துளிகளாக வெளியேறலாம். இது முற்றிலும் இயல்பான ஒன்றாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Alcohol During Periods: மாதவிடாய் சமயத்தில் மது அருந்துவது சரியா? என்ன விளைவுகள் உண்டாகும் தெரியுமா?

மாதவிடாய் காலத்தில் இரத்தம் உறைதல் பிரச்சனை

டாக்டர் தனயா நரேந்திரன் அவர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் காலங்களில் வெளிவரும் இரத்தக்கட்டிகள் ஒரு சிறிய நாணயத்தை விட பெரியதாக இருப்பின், அது சிக்கலை ஏற்படுத்தலாம்.

  • மாதவிடாய் காலத்தில் பெரிய கட்டிகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓஎஸ், தைராய்டு மற்றும் அடினோமயோசிஸ் போன்றவையே ஆகும்.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கான காரணம் கருமுட்டை சரியாக செயல்படாமல் இருப்பது அல்லது இது நடக்கவே இல்லை என்பதைக் குறிப்பதாகும்.
  • மாதவிடாய் சுழற்சி முடிந்த 15 நாட்களில் கருமுட்டை வெளிவந்த பிறகு அடுத்த 15 நாள்கள் மாதவிடாய் வருவது சீரான சுழற்சி ஆகும். ஆனால், கருமுட்டை வெளிவராமல் மாதவிடாய் சுழற்சி மட்டும் நடந்தால், இது அதிக உதிரப்போக்கை குறிக்கலாம்.
  • இந்த காலகட்டத்தில் கருப்பை விரிவடைந்து தடிமனாக இருப்பதால் அடினோமயோசிஸ் ஏற்படுகிறது. இது நீடித்த மற்றும் கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.
  • கருப்பை மற்றும் கருப்பை வாயில் புற்றுநோய் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.
  • மாதவிடாயின் போது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக இரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்படும்.

எனவே மாதவிடாய் காலத்தின் போது சிறிய நாணய அளவிலான இரத்தக் கட்டிகள் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஏனெனில் இது ஒரு தீவிர உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியைக் குறிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நேரத்தில் பழுப்பு நிறத்தில் இரத்தம் வெளியேறுகிறதா? இது தான் காரணம்..

Image Source: Freepik

Read Next

Bra For Sagging Breasts: தொய்வான மார்பகத்திற்கு எந்த ப்ரா சிறந்தது? அதை எப்படி அணிய வேண்டும்?

Disclaimer