How To Cure Gas Problem In Ayurveda: இன்று பெரும்பாலானோர் வாயு மற்றும் அஜீரண கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பழங்காலத்தில் குறைந்த அளவு மசாலா பொருள்களே உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்று அதிகளவு மசாலா பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இது தவிர, மது அருந்துவது, புகைபிடித்தல், சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது போன்றவை வாயு மற்றும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும்.
இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட, உணவில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருள்களின் அளவை குறைப்பது நல்லது. அதே சமயம், சரியான நேரத்தில் சாப்பிடுவது, உணவில் தானியங்களின் அளவைக் குறைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இதற்குப் பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வதை அதிகரிக்கலாம். இதில், ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா வாயு மற்றும் அஜீரண பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவும் மூலிகை பானங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Oil Massage: வயிற்று வலிக்கு இந்த எண்ணெய்ல மசாஜ் பண்ணுங்க. டக்குனு குணமாகிடும்
வாயு மற்றும் அஜீரணத்திற்கு நிவாரணம் தரும் மூலிகை பானங்கள்
சீரக தண்ணீர்
இது பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளை நீக்க உதவும் சிறந்த பானமாகும். இதில் உணவு சாப்பிட்ட பிறகு, குறைந்தது ஒரு மணிநேரத்திற்குப் பின்னர் சீரகத் தண்ணீரைக் குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. கூடுதலாக அஜீரணத்தையும் குறைக்கிறது. இந்த சீரக நீர் செரிமான செயல்முறையை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், கொழுப்பு இழப்புக்கும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உடல் ஆற்றலை அதிகரித்து, சோர்வைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, இந்த சீரக தண்ணீர் நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
கெமோமில் டீ
சீரக நீரைப் போலவே, கெமோமில் டீயையும் உணவு எடுத்துக் கொண்ட 1 மணி நேரத்திற்குப் பின் குடிக்கலாம். குறிப்பாக, இரவு உணவுக்குப் பிறகு, கெமோமில் டீ அருந்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஏனெனில், இந்த டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வயிற்றுப் பிரச்சனையைப் போக்க உதவுகிறது.
மேலும், இது செரிமான அமைப்பை மேம்படுத்தி அஜீரணத்திலிருந்து நிவாரணம் தருகிறது. இது தவிர, கெமோமில் டீ அருந்துவது தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும். இது உடலை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன அமைதியை வழங்கவும், செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் கெமோமில் டீ சிறந்த தீர்வாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dehydration Remedies: கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க
பெருஞ்சீரக டீ
பெருஞ்சீரக டீ ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்ட சிறந்த பானமாகும். இது செரிமானத்தை மேம்படுத்தவும், அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. இந்த டீ அருந்துவது வயிறு வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த தேநீரில் உள்ள பண்புகள் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மன அமைதியை மேம்படுத்துவதாகவும் அமைகிறது. இது தவிர, பெருஞ்சீரக டீ அருந்துவது சிறுநீர் பிரச்சனையை அகற்ற உதவுகிறது. ஏனெனில், இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
இந்த ஆயுர்வேத மூலிகை பானங்களின் உதவியுடன், வாயு மற்றும் அஜீரணக் கோஅளாறு பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Skin Itching Remedies: கொளுத்தும் வெயிலில் சருமத்தில் எரிச்சலா? சிம்பிளான இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்
Image Source: Freepik