Doctor Verified

Fertility Increase Foods: கருவுறுதலை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்! ஆயுர்வேதம் கூறும் கருத்து

  • SHARE
  • FOLLOW
Fertility Increase Foods: கருவுறுதலை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்! ஆயுர்வேதம் கூறும் கருத்து


கருவுறுதலை அதிகரிக்க சில ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகும். இதில் கருவுறுதலை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள் சிலவற்றைக் காணலாம். இதில் கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள் குறித்து நொய்டாவிலுள்ள வைக் ஜி கிளினிக்கின் மருத்துவர் அங்கூர் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Ajwain Tea Benefits: சுட்டெரிக்கும் வெயிலில் ஏற்படும் இந்த பிரச்சனைக்கு அஜ்வைன் டீ ஒன்னு போதும்

கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள்

வால்நட்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் கருவுறுதலை அதிகரிக்க தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுகளில் வால்நட் பருப்பும் ஒன்று. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதற்கு தண்ணீரில் ஊறவைத்த வால்நட்ஸை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் சோடியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஏற்படும் பலவீனத்தை நீக்கி ஆண்களின் பாலியல் சக்தியை அதிகரிக்கிறது.

அஸ்பாரகஸ்

இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இது கருவுறுதலை மேம்படுத்தி உடலுக்கு பலத்தைத் தருகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதல் பிரச்சனையை சமாளிக்க மிகவும் நன்மை பயக்கும்.

தேசி நெய்

ஆண்கள், பெண்கள் இருவருமே தங்கள் கருவுறுதலை அதிகரிக்க தேசி நெய்யை எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதை மிதமான அளவில் மட்டுமே உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். தேசி நெய் உட்கொள்ளல் ஆனது ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கவும், பெண்களின் கருமுட்டை தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. முடிந்த வரை வீட்டில் தயாரிக்கப்பட்ட தேசி நெய்யைப் பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Joint pains: இதையெல்லாம் சாப்பிட்டால் முடக்கிப்போடும் மூட்டுவலி உடனே காணாமல் போகும்!

எள்

இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொக்கிஷம் ஆகும். இதில் சோடியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை எடுத்துக் கொள்வது உடலுக்குப் பலத்தைத் தருகிறது. மேலும் இதன் நுகர்வு உடலில் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையைக் குறைக்கிறது. இதற்கு எள்ளை லட்டு அல்லது வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

சிட்ரஸ் பழங்கள்

திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் கருவுறுதலை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பெண்களில் இது கருவுறாமைக்கான ஆபத்தைக் குறைக்கிறது. ஃபோலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து ஆகும். இது கருவில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இந்த உணவுகளை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எடுத்துக் கொள்வது கருவுறுதலுக்கு சிறந்த ஆதாரமாக விளங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Uric Acid: யூரிக் அமில பிரச்சனையைத் தவிர்க்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்

Image Source: Freepik

Read Next

Joint pains: இதையெல்லாம் சாப்பிட்டால் முடக்கிப்போடும் மூட்டுவலி உடனே காணாமல் போகும்!

Disclaimer