$
Best Ayurvedic Herbs To Reduce Uric Acid: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதமும் அமைகிறது. எனினும், உடலில் புரதத்தின் அளவு அதிகரிப்பதால் யூரிக் அமிலமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால், கால்விரல்கள், முழங்கால்கள், கணுக்கால், மணிக்கட்டுகள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளில் இரத்தத்தில் குவியத் தொடங்குகிறது. இதனால் இந்த இடங்களில் வலி ஏற்படுகிறது.
காரணங்கள்
உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக சில பொதுவான காரணங்கள் உள்ளது. அவை கடல் உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி உணவுகள் போன்ற பியூரின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, உடல் பருமன், நீரிழப்பு, டையூரிடிக்ஸ் போன்ற சில மருந்துகள், மது அருந்துதல் மற்றும் சிறுநீரக நோய் போன்ற சுகாதார நிலைமைகள், வளர்ச்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது ஹைப்போ தைராய்டிசம் போன்றவற்றால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகிறது. இந்த காரணிகளை நிர்வகிப்பதன் மூலம் ஆரோக்கியமான யூரிக் அமில அளவை பராமரிக்க முடியும்.
இந்த அதிகரித்த யூரிக் அமில ஏற்றத்தாழ்வு பிரச்சனை சிறுநீரகக் கற்கள், மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உடலில் யூரிக் அமிலத்தைக் குறைக்க இயற்கையான முறையில் சில ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தலாம். இதில் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க
யூரிக் அமில அளவைக் குறைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
கிலோய்
குடுச்சி என அழைக்கப்படும் கிலோய், ஆயுர்வேதத்தின் படி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் இலைகள் முதல் தண்டுகளிருந்து வெளியேறும் சாறு வரை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும். இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. மேலும் இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

செலரி விதைகள்
இதில் டையூரிடிக் பண்புகள் நிறைந்துள்ளது. இவை சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலிலிருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றலாம்.
மெத்தி
வெந்தயம் என்றழைக்கப்படும் மெத்தி, சக்தி வாய்ந்த மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையாகும். இதில் ஃபிளவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் போன்ற கலவைகள் நிறைந்துள்ளது. மேலும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. மெத்தி விதைகள் அல்லது இலைகளைத் தொடர்ந்து உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் மெத்தி உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Body Pain Remedies: தீராத உடல் வலி நீங்க இத மட்டும் செய்யுங்க போதும்
புனர்னவா
இது திசுக்களை புதுப்பிப்பது என அழைக்கப்படுகிறது. இதன் டையூரிடிக் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் உடலிலிருந்து அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுப் பொருள்களை அகற்றுவதுடன், யூரிக் அமில படிகங்களை வெளியேற்றுகிறது. இது கல்லீரல் செயல்பட்டை ஆதரிக்கவும், ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது.
குகுல்
குகுல் பிசின் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது கீல்வாதம் போன்ற நிலைகளுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
திரிபலா
இது மூன்று பழங்களைக் கொண்ட ஆயுர்வேத கலவையாகும். ஆம்லா, ஹரிடகி மற்றும் பிபிதாகி போன்றவற்றின் கலவையாகும். இது இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும் குடல் இயக்கம் மற்றும் நச்சுத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது தவிர செரிமான ஆரோக்கியத்திற்கும் திரிபலா உதவுகிறது. இது யூரிக் அமில அளவைக் குறைக்கவும், உடலில் அதன் திறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Heat: உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கா? கூலா வெச்சிக்க இந்த ஆயுர்வேத மூலிகைகள் எடுத்துக்கோங்க
இது தவிர, அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்கும் திறனைக் கொண்ட பல்வேறு மசாலாப் பொருள்கள் உள்ளன.
இஞ்சி
இது கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும், யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
கொத்தமல்லி
கொத்தமல்லி விதைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை யூரிக் அமில அளவைக் குறைக்கவும், கீல்வாதத்தின் அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது.
இலவங்கப்பட்டை
இதில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் யூரிக் அமில அளவுடன் தொடர்பான நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது.
இவை அனைத்தும் உடலில் யூரிக் அமிலத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Dry Dates Benefits: உடல் வலிமையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை இப்படி சாப்பிடுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version