What Is The Benefits Of Eating Dry Dates: இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் ஜங்க் ஃபுட், எண்ணெய் உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளையே விரும்பி உண்ணுகின்றனர். இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். இதை எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான எந்த ஊட்டச்சத்துக்களையும் தருவதில்லை. அதே சமயம், பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறவும், உடல் வலிமையை அதிகரிக்கவும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பேரீச்சம்பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலம். பேரீச்சம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றுடன் பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் உடல் வலிமையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை உட்கொள்ளும் வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Kidney Health: சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகைகளை எடுத்துக்கோங்க
உடல் வலிமையை அதிகரிக்க பேரீச்சம்பழத்தை எப்படி சாப்பிடுவது?
உடலை ஆரோக்கியமாக வைக்க பேரீச்சம்பழத்தைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.
உலர் பேரீச்சம்பழம் கீர்
பேரீச்சம்பழத்தை கீர் செய்து சாப்பிடலாம். இதன் மூலம் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். இதற்கு முதலில் 5 பேரீச்சம்பழங்களை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி விதைகளை பிரிக்க வேண்டும். அதன் பிறகு, 2 கப் பாலில் 25 கிராம் அளவிலான மக்கானா தூள் மற்றும் பேரீச்சம்பழத் துண்டுகளைக் கலந்து கீராகத் தயார் செய்யலாம்.
இதில் உலர் பேரீச்சம்பழம் இயற்கை இனிப்பைத் தரும். இனிப்பு குறைவாக இருப்பின் தேன் சேர்த்துக் கொள்ளலாம். உலர் பேரீச்சம்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் கீரானது உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
உலர் பேரீச்சை சட்னி
இந்த ரெசிபி தயார் செய்ய, முதலில் பேரீச்சம்பழத்தை குறைந்தது 2 மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு, ஊறவைத்த பேரீச்சம்பழத்தின் விதைகளை பிரித்து, அதில் பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, கல் உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். பேரீச்சம்பழத்தைக் கொண்டு தயார் செய்யப்படும் இந்த சட்னி இனிப்பு மற்றும் புளிப்பு சுவை இரண்டையும் தருகிறது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds For Brain: மூளைத் திறனை அதிகரிக்க இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க
பாலில் ஊறவைத்த உலர் பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதைத் தினமும் பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வருவது உடல் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு 4 பேரீச்சம்பழத்தை எடுத்து அதன் விதைகளைப் பிரித்து, 1 கப் பாலில் பேரீச்சம்பழத் துண்டுகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் இரவு முழுவதும் மூடி வைத்து, மறுநாள் இந்த பாலைக் குடித்து விட்டு, பேரீச்சம்பழத்தை சாப்பிடலாம். இதில் பால் சேர்ப்பது கூடுதல் நன்மைகளைத் தருகிறது.
உடலை ஆரோக்கியமாக வைக்கவும், உடல் வலிமையை அதிகரிக்கவும் பேரீச்சம்பழத்தை இந்த வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். எனினும் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் ஒவ்வாமை அல்லது வேறு சில பிரச்சனைகள் இருப்பின், இதை உட்கொள்ளும் முன்னதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க
Image Source: Freepik