Is Raisins Good For Cough And Cold: கோடைக்கால பருவமாற்றத்தின் போது பல்வேறு நோய்த்தொற்றுக்கள் பரவலாம். அதிலும் குறிப்பாக, நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிப்படைகின்றனர். குறிப்பாக, சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதில் ஏற்படும். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இருமலால் அவதியுறுகின்றனர். இது இரவு தூக்கத்தைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இருமலால் தொண்டை வலி பிரச்சனையும் ஏற்படலாம்.
சில சமயங்களில், இந்த இருமல் பல மாதங்களாக நீடிக்கலாம். ஆயுர்வேதத்தின் படி, இருமலானது கப தோஷத்தால் ஏற்படுகிறது. இவ்வாறு நீடித்த சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கருப்பு உலர் திராட்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள் மற்றும் அதிலிருந்து விடுபட கருப்பு உலர் திராட்சையை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பது குறித்து ராம்ஹான்ஸ் தொண்டு மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த வெயில்ல அதிக ஸ்பைசி உணவுகள் சாப்பிடுபவர்களா நீங்க? ஆயுர்வேதம் சொல்லும் விளைவுகள் இதோ!
கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கருப்பு உலர் திராட்சையில் உள்ள தனிமங்கள், மார்பில் படிந்திருக்கக்கூடிய சளியை அகற்ற பெரிதும் உதவுகிறது.
- திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை இருமலிலிருந்து விடுபட உதவுகிறது.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருப்பு உலர் திராட்சையை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
- கருப்பு உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. எனவே, பலவீனமான எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 10 முதல் 12 கருப்பு உலர் திராட்சைகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Spices For Summer: சம்மர்ல இந்த ஸ்பைசஸ் சாப்பிடுங்க! உடல் சூடு வேகமா குறைஞ்சிடும்
- கருப்பு உலர் திராட்சையில் நிறைந்துள்ள கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- இந்த திராட்சைப்பழத்தில் நல்ல அளவு இரும்புச்சத்துக்கள் உள்ளது. எனவே இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு உலர் திராட்சையை உட்கொள்ளலாம். மேலும் இது முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.
- கருப்பு உலர் திராட்சையில் நல்ல அளவிலான பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- கருப்பு உலர் திராட்சை உட்கொள்ளல் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இரு இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது.

இருமல் பிரச்சனைக்கு கருப்பு உலர் திராட்சை சாப்பிடும் முறை
தொடர்ந்து இருமல் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு உலர் திராட்சையை இந்த வழிகளில் உட்கொள்ளலாம்.
- இருமலுக்கு கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- முதலில் 8 முதல் 10 கருப்பு உலர் திராட்சையை எடுத்து ஒரு முறை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
- பிறகு 1 கிளாஸ் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கழுவிய கருப்பு உலர் திராட்சை சேர்த்து ஓரிரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
- இவ்வாறு ஊறவைத்த திராட்சையை சாப்பிடும் போது, அதன் தண்ணீரையும் அருந்த வேண்டும்.
- மற்றொரு முறையாக, கருப்பு உலர் திராட்சையை சூடான பாலில் சேர்த்து இரவில் சாப்பிடலாம்.
இந்த வழியில் கருப்பு உலர் திராட்சையை உட்கொள்வது இருமல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. எனினும், நீண்ட காலமாக இருமல் நீடித்திருப்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, வேறு ஏதேனும் மருத்துவ நிலையைக் கொண்டவர்கள் கருப்பு உலர் திராட்சை எடுத்துக் கொள்ளும் முன் நிபுணர் அல்லது மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!
Image Source: Freepik