Sat Sep 12, 2026 | 02:23 AM IST

Expert

Black Raisins For Child: குழந்தைகளின் நினைவாற்றலை டபுள் மடங்காக்கும் கருப்பு உலர் திராட்சை.! எப்போ கொடுக்கணும் தெரியுமா?

Black Raisins Benefits for Child: குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப, அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும். இந்த சூழ்நிலையில் சரியான ஊட்டச்சத்து வழங்குவது சரியான வளர்ச்சிக்கும் உதவும். இதற்கு சிறந்த தேர்வாக கருப்பு திராட்சையைக் கொடுக்கலாம். இவை சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாக அமையும்.

கருப்பு திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்

இதில் புரதம், கால்சியம், இரும்பு, சோடியம், துத்தநாகம், வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை குழந்தைகளின் செரிமான அமைப்பை வலுப்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கிறது. கருப்பு திராட்சைப் பழத்தில் உள்ள நல்ல அளவிலான இரும்புச்சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனுக்கு அவசியமாகும். எனவே திராட்சையை குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். இதில் குழந்தைகளுக்கு கருப்பு திராட்சை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Breakfast For Babies: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க காலை உணவாக இதெல்லாம் கொடுங்க

குழந்தைகளுக்கு கருப்பு திராட்சை தரும் நன்மைகள்

கருப்பு திராட்சையைக் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இரத்த சோகையை நீக்க

குழந்தைகள் பலரும் தங்கள் உடலில் இரத்தம் இல்லாததால் அவதிப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் கருப்பு திராட்சை கொடுப்பது அவர்களின் உடலில் இரத்த சோகையை நீக்குவதுடன், குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. இந்த திராட்சையில் உள்ள இரும்புச்சத்துக்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை பிரச்சனையை நீக்குகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

கருப்பு திராட்சையைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், திராட்சையில் உள்ள போரான் என்ற தனிமம் எலும்பு பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உடல் வளர்ச்சிக்கு

கருப்பு திராட்சை குழந்தைகளுக்குத் தருவது அவரின் உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை குழந்தையின் உடலை வலுப்படுத்துவதுடன், அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: GH Deficiency Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் குழந்தை வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுவதாம்.

நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த

கருப்பு திராட்சை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. இவை வைரஸ் தொற்றுக்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும் இவை பூஞ்சை தொற்றுக்களையும் நீக்குகிறது. கருப்பு திராட்சையை உட்கொள்ள வைப்பதன் மூலம் குழந்தைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பர்.

குழந்தைகளுக்கு கருப்பு திராட்சை எப்போது கொடுக்கலாம்

குழந்தைகள் 8 மாதங்கள் அல்லது 1 வயது ஆன பிறகே கருப்பு திராட்சையைக் கொடுக்க வேண்டும். அதே சமயம், அளவில் சிறியதாக இருக்க வேண்டும். திராட்சை நசுக்கிய பிறகு சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு 2 உலர் திராட்சைகளும், பெரிய குழந்தைகளுக்கு 3 முதல் 4 திராட்சை பழங்களும் தரலாம்.

திராட்சையைக் குழந்தைகளுக்குத் தருவதால் மேலே கொடுக்கப்பட்ட நன்மைகளைப் பெறலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருப்பின், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே கருப்பு திராட்சையைக் கொடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Milk With Banana Benefits: குழந்தைகளுக்கு பாலுடன் வாழைப்பழம் சேர்த்து கொடுப்பதில் இத்தனை நன்மைகளா?

Image Source: Freepik

Read Next

Angry Kids: குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content