$
Milk And Banana Benefits For Baby: உடலில் எளிதாக நோய்த்தொற்றுக்கள் அதிகமாக முக்கிய காரணம் பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தியே ஆகும். அதிலும் குறிப்பாக குழந்தையின் நோயெதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமாக இருக்கும். இதன் காரணமாகவே, அவர்கள் விரைவில் நோய்த்தொற்றுக்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு சில ஆரோக்கியமான உணவுகளை வழங்க வேண்டும். இது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அந்த வகையில், குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பால் மற்றும் வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மற்றும் பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Moringa Powder Benefits: குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?
ஊட்டச்சத்துக்கள்
பாலில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம், இரும்பு, புரதம் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின்கள், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை இரண்டும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில், குழந்தைகளுக்கு பால் மற்றும் வாழைப்பழம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

குழந்தைகளுக்கு பால் மற்றும் வாழைப்பழம் தரும் நன்மைகள்
பால் மற்றும் வாழைப்பழம் இரண்டுமே குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருகிறது. இதில் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மற்றும் பால் இரண்டும் தருவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
குழந்தைகளுக்கு பால் மற்றும் வாழைப்பழம் கொடுப்பது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பால் மற்றும் வாழைப்பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது. இது அவர்களுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: GH Deficiency Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் குழந்தை வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுவதாம்.
இரத்த சோகை குணமாக
குழந்தைகளுக்கு பால், வாழைப்பழம் தருவது இரத்த சோகை சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது. வாழைப்பழத்தில் அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இவை குழந்தையின் உடலில் ஏற்படும் இரத்தப்பற்றாக்குறை பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண்பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை நீங்க
ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதன் மூலமோ அல்லது சரியாக மென்று சாப்பிடாததன் காரணமாகவோ, குழந்தைகள் பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனையை நீக்க பால் மற்றும் வாழைப்பழத்தை உட்கொள்ளலாம். இதில் உள்ள ஏராளமான நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருப்பின், குலுக்கி அல்லது மசித்த வாழைப்பழத்தைக் கொடுக்கலாம்.

குழந்தையின் வளர்ச்சிக்கு
வாழைப்பழம் மற்றும் பாலைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது, அவர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைகிறது. இந்த இரண்டு பொருள்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இது அவர்களின் உயரத்தை அதிகரித்து, தசைகளை வலுவடைய வைக்கிறது.
குழந்தைகளுக்கு பால் மற்றும் வாழைப்பழத்தை எப்படி கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு வாழைப்பழம் மற்றும் பாலை எப்படி தருவது என்பது குறித்துக் காணலாம். மிக்ஸியில் ஒரு கிளாஸ் பால் சேர்த்து, அதில் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாகச் சேர்த்துக் கொள்ளவும்.
பின் இதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் உலர் பழங்கள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Breakfast For Babies: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க காலை உணவாக இதெல்லாம் கொடுங்க
Image Source: Freepik