Health Benefits Of Mango With Milk: கோடைக்காலம் வந்து விட்டாலே மாம்பழம் மீதான நாட்டம் அதிகமாகவே காணப்படும். இது சாப்பிட சுவையானதாக இருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தருவதாக அமைகிறது. மாம்பழத்தில் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதாவது கேட்டசின்கள், பென்சாயிக் அமிலம், அந்தோசயினின்கள் மற்றும் மாங்கிஃபெரின் போன்ற பல்வேறு ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.
இது தவிர, வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Litchi Fruit: இந்த பிரச்சனைகள் இருக்கறவங்க கட்டாயம் லிச்சி பழம் சாப்பிடணும்!
மாம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடலாமா?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட மாம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதா? ஆம். பாலிலும் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது குறித்து மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர் மற்றும் சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளர் கரிமா கோயல் அவர்கள், சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
மாம்பழத்தில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் பின் மற்றும் இன்னும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மாம்பழத்தையும், பாலும் ஒன்றாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு மாம்பழத்தை நேரடியாக பாலுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது மாம்பழ ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதில் மாம்பழம் மற்றும் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
பாலுடன் கூடிய மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
மாம்பழத்தை பாலுடன் சேர்த்து உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
இதய ஆரோக்கியத்திற்கு
மாம்பழம் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இவை உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க ஏதுவாக அமைகிறது. மேலும், இது இரத்த நாளங்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாப்பாக வைக்கவும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Height Increasing Foods: உங்க உயரத்தை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, பி மற்றும் கே போன்ற ஆரோக்கியமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் புரதச்சத்துக்கள் காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சளி, காய்ச்சல் மற்றும் பிற வைரஸ் தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.
கண் ஆரோக்கியத்திற்கு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் காணப்படுகிறது. இவை ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. மேலும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் ஏ சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை கண்களின் வெளிப்புற அடுக்கைப் பாதுகாப்பாக வைப்பதில் பயனுள்ளதாக அமைகிறது. மேலும் கார்னியாவின் செயல்பாட்டை பராமரிப்பதுடன், கண்பார்வையை மேம்படுத்துகிறது.
நல்ல தூக்கத்திற்கு
இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் போராடி வருகின்றனர். தூக்கமின்மை பிரச்சனைக்கு உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலுடன், சில துண்டுகள் மாம்பழத்தைச் சேர்த்து சாப்பிடுவது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
வயிறு ஆரோக்கியத்திற்கு
மாம்பழம் நார்ச்சத்து நிறைந்த பழமாகும். இதில் செரிமான நொதிகளுடன் அதிக நீர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பாலில் புரதம் உள்ளது. இதன் காரணமாக, இந்தக் கலவையானது வயிறு சார்ந்த பிரச்சனைகளை நீக்கி, செரிமான ஆரோக்கியத்திய மேம்படுத்துகிறது. மேலும், வாயு, வீக்கம், அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
இவ்வாறு, மாம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனினும் வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளைக் கொண்டிருப்பின், மருத்துவ ஆலோசனைக்கு பிறகு எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: இந்த பழங்களை சாப்பிட்டா வயிறு உப்புசமா இருக்குமாம்! வயிறு வீக்கத்தைத் தடுக்க என்ன செய்வது?
Image Source: Freepik