பால், தயிரை ஒன்றாகச் சாப்பிட போறீங்களா? அப்ப இந்த பிரச்சனைகள் கன்ஃபார்ம்

Is it ok to eat curd and milk together: ஆயுர்வேதத்தின் படி, சில உணவுகளை ஒன்று சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதில் தயிர் மற்றும் பால் சாப்பிடுவது அடங்கும். இதில் தயிர் மற்றும் பாலைச் சேர்த்து சாப்பிடுவது ஏன் உடலுக்கு நல்லதல்ல என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
பால், தயிரை ஒன்றாகச் சாப்பிட போறீங்களா? அப்ப இந்த பிரச்சனைகள் கன்ஃபார்ம்

Why milk and curd should not be eaten together: நம்மில் பலரும் எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகின்றனர். ஆனால், இதற்கு நம் அன்றாட உணவுமுறையில் கவனம் செலுத்துவது அடங்கும். ஏனெனில், நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளே நம்மை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால், உடலில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்போதெல்லாம், உடலில் உள்ள ஊட்டச்சத்தை நிறைவு செய்ய பல உணவு சேர்க்கைகள் நன்மை தருவதாகக் கூறப்படுகிறது.

எனவே தான் சில உணவுச்சேர்க்கைகளை மக்கள் விரும்பி எடுத்துக் கொள்கின்றனர். இதில் மக்கள் பல வகையான இனிப்பு உணவுகள், கேக்குகள், ஸ்மூத்திகள் போன்றவற்றைத் தயார் செய்ய இந்தக் கலவையை முயற்சிக்கின்றனர். இந்த வரிசையில் பால் மற்றும் தயிர் அடங்கும். ஆனால், ஆயுர்வேதத்தின் படி, உணவுச்சேர்க்கையான பால் மற்றும் தயிர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து, ஹரியானாவின் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் மதிய உணவில் ஒரு கிண்ணம் தயிர் சேர்துக்கோங்க.. நன்மைகளை நீங்களே காண்போர்..

ஏன் பாலையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடக்கூடாது?

ஆயுர்வேதத்தில், தயிர் மற்றும் பாலை ஒன்றாகச் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், தயிர் பெரும்பாலும் அமிலத்தன்மை கொண்டதாகும். மேலும், இது புளிப்பானது. இதை பாலுடன் சேர்ப்பதால், அவை செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கலாம். தயிர் மற்றும் பால் இரண்டுமே வெவ்வேறு நொதிகளைக் கொண்டதாகும். இவை செரிமான அமைப்புக்குத் தேவையானவையாகும். ஆனால், வெவ்வேறு நொதிகளுக்கு இடையிலான மோதலால், செரிமான அமைப்புக்கு சேதம் ஏற்படலாம். இதன் காரணமாக, உடலில் நச்சுக்கள் உருவாகலாம்.

அடுத்த காரணமாக, பகலில் எந்த நேரத்திலும் பாலை உட்கொள்ளலாம். ஆனால், தயிரை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு மட்டுமே உட்கொள்வது அவசியமாகும். பாலை எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் தான், சிலர் இதை காலை உணவாக எடுத்துக் கொள்கின்றனர். பலர் தூங்கும் முன் இதைக் குடிப்பார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, தயிரை உணவுடன் மட்டுமே சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. இவை வயிற்றில் இருக்கும் செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்து, செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும், வயிற்றில் இருக்கும் அமிலம் புறணி மற்றும் குடலைப் பாதிப்பதைத் தடுக்கிறது.

பால் மற்றும் தயிரை ஒன்றாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்

பால் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிடுவதால் அது செரிமான அமிலத்தை அதிகரிக்கலாம். இதனால் வாயு, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், தயிர் மற்றும் பால் ஒன்றாக செரிமானம் அடைவது கடினமாகும். இது செரிமான செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்களுக்கு பால் பிடிக்காதா? - அப்போ கால்சியம் குறைப்பாட்டை போக்க இந்த 5 பானங்கள குடிங்க போதும்...!

இந்தக் கலவையானது செரிமான செயல்முறைக்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

பால் மற்றும் தயிரை ஒன்றாக உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து, வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். தயிர் அல்லது பால் அல்லது இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளையும் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட விரும்பினால், அவற்றுக்கிடையே ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் இடைவெளி எடுக்கலாம். மேலும் காலை உணவில் பால் சாப்பிடுவது, மதிய உணவில் தயிர் என்ற கணக்கில் சாப்பிடலாம்.

முடிவு

நிபுணர்களின் கூற்றுப்படி, பால் மற்றும் தயிரை ஒன்றாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுச் சேர்க்கையாக இருக்காது. இதன் காரணமாக, உடலில் நச்சுகள் அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இதை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கலாம். இது வீக்கம், அமிலத்தன்மை, வயிற்றுவலி மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது குறித்த மேலும் சில தகவல்களுக்கு நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பால் குடிக்கறது நல்லது தான்! ஆனா அதிகமா குடிச்சா பிரச்சனை உங்களுக்குத் தான்

Image Source: Freepik

Read Next

இருமடங்கு ஆரோக்கியம் வேண்டுமா? - காளான்களை இப்படி சமைத்து சாப்பிடுங்க...!

Disclaimer