Doctor Verified

Moringa Powder Benefits: குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?

  • SHARE
  • FOLLOW
Moringa Powder Benefits: குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா.?


முருங்கைப் பொடியை குழந்தைகளின் உணவில் சேர்ப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? குழந்தைகளுக்கு முருங்கைப் பொடி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து குழந்தை நல மருத்துவர் டாக்டர் அர்பித் குப்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில் குழந்தைக்கு முருங்கைப் பொடி கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Nuts For Babies: 6 மாத குழந்தைக்கு நட்ஸ் கொடுக்கணுமா? அப்ப இப்படி கொடுங்க.

குழந்தைகளுக்கு முருங்கைப் பொடியின் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

முருங்கைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக முருங்கையில் பாலை விட 17 மடங்கு கால்சியம் சத்துக்களும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு பொட்டாசியம் சத்துக்கள், கீரையை விட 25 மடங்கு இரும்பு மற்றும் கேரட்டை விட 10 மடங்கு வைட்டமின் ஏ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

நோயெதிர்ப்புச் சக்திக்கு

குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியானது, பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும். இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு முருங்கைப் பொடியைத் தருவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும், இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை குழந்தைகளை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

பொதுவாக குழந்தைகளுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க முருங்கைப் பொடி கொடுக்கலாம். ஏனெனில், முருங்கைப்பொடியில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு முருங்கையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது அவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க உதவுகிறது.

கண் ஆரோக்கியத்திற்கு

கேரட்டுடன் ஒப்பிடுகையில் முருங்கைப் பொடி 10 மடங்கு அதிகமான வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு முருங்கைப் பொடியைக் கொடுப்பதன் மூலம் சிறுவயதிலேயே கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதுடன், கண் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Child Excessive Blinking: உங்க குழந்தை அதிகமா கண் சிமிட்டுதா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவர்களின் உணவில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு முருங்கைப்பொடி தருவது, அவர்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைகளுக்கு முருங்கை பொடியை எப்படி கொடுக்கலாம்?

  • பொதுவாக குழந்தைகள் பழச்சாறுகள், பழஸ்மூத்திகள் போன்றவற்றியே விரும்புவர். அதன் படி, முருங்கைப் பொடியை ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இது சுவையை அதிகரிப்பதுடன், குழந்தைகளுக்கு சிறந்த ஆற்றலைத் தருவதாகவும் அமைகிறது.
  • முருங்கைப் பொடியை பழங்களில் தூவி அல்லது குழந்தைகள் விரும்பும் ரொட்டி, பராத்தா போன்றவற்றுடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
  • தயிர், மோர், ரைத்தா போன்றவற்றுடன் முருங்கைப்பொடியை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இவ்வாறு குழந்தைகளுக்கு பல்வேறு வழிகளில் முருங்கைப்பொடி நன்மை தருகிறது. எனினும், குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருப்பின், குழந்தை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே, முருங்கைப் பொடியை கொடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட். குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

Image Source: Freepik

Read Next

டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட். குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

Disclaimer