டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட். குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?

  • SHARE
  • FOLLOW
டார்க் சாக்லேட் Vs மில்க் சாக்லேட். குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?


அந்த வகையில் டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் உண்பது எந்த வகையில் ஆரோக்கியத்தைத் தரும் தெரியுமா? அதிலும் குழந்தைகளுக்கு எந்த சாக்லேட் ஆரோக்கியம் மிக்கது. இதில் எந்த சாக்லேட்டில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டுள்ளது என்பது தெரிந்த பிறகே கொடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Child Tooth Decay: உங்க குழந்தைக்கு பற்சொத்தை வராமல் தடுக்க இதெல்லாம் செய்யுங்க.

மில்க் சாக்லேட்

  • இந்த சாக்லேட் வகையானது பால் பொருள்களை அடிப்படையாகக் கொண்டதாகும். இதில், கோகோ திடப்பொருள்கள் மற்றும் சர்க்கரையைத் தவிர பால் திடப்பொருள்கள் நிறைந்துள்ளன.
  • டார்க் சாக்லேட்டுடன் ஒப்பிடுகையில் இது க்ரீமியர் அமைப்பு மற்றும் இனிமையான சுவை மிக்கதாகும்.
  • மேலும் டார்க் சாக்லேட்டுகளில் இருக்கும் பொருள்களுடன் ஒப்பிடுகையில் , இந்த மில்க் சாக்லேட்டுகளில் கோகோ பவுடர் குறைவாகவும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். எனவே இதை குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணுகின்றனர்.
  • சில மில்க் சாக்லேட்டுகள் வணிக ரீதியாக பெறப்படும். எனினும், இதனை ஒரு பெரிய பிரச்சனையாகக் கருத தேவையில்லை. ஆனால், அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

டார்க் சாக்லேட்

  • டார்க் சாக்லேட்டுகளில் அதிகளவு கோகோ பவுடர், குறைந்த அளவு சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது.
  • இதில் அதிகளவில் கோகோ பவுடர் சேர்க்கப்படுவதால், கசப்பு சுவையாக இருக்கும். இதனால் சில குழந்தைகள் இதை விரும்புவதில்லை.
  • ஆனால், இந்த சாக்லேட் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதுடன், புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், டார்க் சாக்லேட் அறிவாற்றலை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
  • இதில் உள்ள பிளவனாய்டுகள் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Nuts For Babies: 6 மாத குழந்தைக்கு நட்ஸ் கொடுக்கணுமா? அப்ப இப்படி கொடுங்க.

குழந்தைகளுக்கு எந்த சாக்லேட் சிறந்தது?

பொதுவாக குழந்தைகளுக்குச் சாக்லேட் தருவது கேடு விளைவிக்கும் செயல் தான். ஆனால், சாக்லேட்டுகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க எண்ணுபவர்கள் டார்க் சாக்லேட்டுகளைத் தேர்வு செய்யலாம். ஏனெனில், மில்க் சாக்லேட்டுகளுடன் ஒப்பிடுகையில் டார்க் சாக்லேட்டுகளில் குறைந்த அளவு சர்க்கரையே சேர்க்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு டார்க் சாக்லேட்டுகளைத் தரலாம்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கவனிக்கும் பொருட்டு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இனிப்புகளைத் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், எப்போதாவது குறைவான அளவில் கொடுக்கலாம். வழக்கமாக கொடுப்பது அவர்களின் உடல்நலனைப் பாதிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Child Excessive Blinking: உங்க குழந்தை அதிகமா கண் சிமிட்டுதா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

Image Source: Freepik

Read Next

Child Excessive Blinking: உங்க குழந்தை அதிகமா கண் சிமிட்டுதா? அப்ப இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்.

Disclaimer