Ways To Give Nuts To Infants: உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருவதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, பிறந்து 6 மாதங்கள் ஆன குழந்தைக்கும் பெற்றோர்கள் நட்ஸ் கொடுப்பதை விரும்புவர். குழந்தைகளில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் நட்ஸ் கொடுப்பது அவசியம் ஆகும். இது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உகந்ததாக அமைகிறது.
நட்ஸ்கள் பல்வேறு ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த சத்தான பொருளாகும். இவை மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆனால், சிறு குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, பெற்றோர்கள் சற்று எச்சரிக்கையுடனே செயலாற்ற வேண்டும். ஏனெனில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, வால்நட் போன்றவை சில சமயங்களில் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ADHD Symptoms: குழந்தைகளுக்கு ஏற்படும் ADHD வகைகள் மற்றும் அதன் அறிகுறிகள்
குழந்தைக்கு எத்தனை வயதில் நட்ஸ் கொடுக்கலாம்?
எனவே குழந்தைகளுக்கு நட்ஸ் கொடுக்கும் போது கவனமாகச் செய்ய வேண்டும். இது குறித்து குழந்தை நல மருத்துவர் டாக்டர் சாஞ்சி ரஸ்தோகி அவர்கள் கூறுகையில், “சமீபத்திய ஆராய்ச்சியின் படி, 6-9 மாதங்களிலேயே குழந்தைக்கு நட்ஸ் கொடுகலாம். மேலும் குழந்தை தாய்ப்பால் அருந்திய பிறகு நட்ஸ்களை அறிமுகப்படுத்தலாம்.” என்று கூறியுள்ளார். மேலும், குழந்தைகளுக்கு நட்ஸ் கொடுக்கும் போது பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகள் குறித்து டாக்டர் சாஞ்சி அவர்கள் இன்ஸ்டகிராம் பதிவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றிக் காண்போம்.
6 மாத குழந்தைகளுக்கு நட்ஸ் கொடுப்பது எப்படி?
பிறந்த 6 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு நட்ஸ் எவ்வாறு கொடுக்கலாம் என்பதைக் காண்போம்.
- பொதுவாக, குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருப்பின் அது தெரியாமல் போகலாம். எனவே, கலப்பு நட்ஸ் பொடியை கொடுக்க வேண்டாம்.
- நாளின் ஆரம்பத்தில் நட்ஸ்களை ஊட்ட வேண்டும். இதனால், ஒவ்வாமை ஏற்பட்டால், அதைக் கவனித்து நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Autism Childrens Therapy: ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை முறைகள்
- குழந்தைக்கு முதல் முறையாக நட்ஸ்களை ஊட்டும் போது, மற்ற உணவுகளுடன் கலக்கக் கூடாது. எப்போதும் அதை எந்த உணவுகளுடனும் கலக்காமல் கொடுக்க வேண்டும்.
- நட்ஸை சிறிய அளவில் கொடுக்கப்பட வேண்டும். முதல் ¼ டீஸ்பூன் கொடுக்கலாம். அதன் பிறகு 10 நிமிடங்கள் கழித்து எந்த பிரச்சனையும் இல்லை எனில் மேலும் கொடுக்கலாம்.
- இதுபோன்று, வாரத்திற்கு 2 முதல் 3 முறை உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு நட்ஸ் கொடுக்கும் போது சாத்தியமான ஒவ்வாமை அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். இது மிகவும் பொதுவானதாக இருப்பினும், தீவிரமானதாகவும் இருக்கலாம். இது சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கலாம். எனவே கவனமாக இருக்கவும். அசாதாரணமான நிலை எதாவது கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Osteoporosis Awareness Day 2023: குழந்தைகளை வாட்டி வதைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Image Source: Freepik