Doctor Verified

Osteoporosis Awareness Day 2023: குழந்தைகளை வாட்டி வதைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Osteoporosis Awareness Day 2023: குழந்தைகளை வாட்டி வதைக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் எதனால் ஏற்படுகிறது தெரியுமா?


குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் குறித்து வாஷி ஃபோர்டிஸ் மருத்துவமனை ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், எலும்பியல் துறை இயக்குநருமான டாக்டர் பிரமோத் போர் அவர்கள் குழந்தைகள் ஏன் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துரைத்துள்ளார். மேலும் இதில் என்ன வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன என்பதையும் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Child Avoid Foods: குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன?

இளம் வயது ஆஸ்டியோபோரோசிஸ் ஏன் ஏற்படுகிறது (Causes Of Juvenile Osteoporosis)

மருத்துவர் பிரமோத் போர் கூற்றின் படி, ஆஸ்டியோபோரோசிஸ் நோயானது குழந்தைகளை பலவீனப்படுத்துகிறது. பொதுவாக இது 8 முதல் 14 வரையிலான குழந்தைகளிலேயே அடிக்கடி காணப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்த குறிப்பிட்ட வயதை விட சிறிய குழந்தைகளிலும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படலாம். இது தீவிரமான நோயாகும்.

இந்த ஆஸ்டியோபோரோசிஸ் நோயானது குழந்தைகளை இரு வழிகளில் பாதிக்கிறது. முதல் வகை இரண்டாம் நிலை என்றும், இரண்டாம் வகை இடியோபாடிக் எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டாம் நிலை

இந்த வகைகளில், சில நோய்களால் ஏற்கனவே ஆஸ்டியோபோரோசிஸ் நோய் குழந்தைகளுக்கு இருக்கலாம். இதில், லுகேமியா, செலியாக் நோய், சிஸ்டிக்ஃபைப்ரோஸிஸ், ஹோமோசைஸ்டினுரியா, குஷிங்ஸ் சின்ட்ரோம், சிறுநீரக நோய், ஹைப்பர் தைராய்டிசம், உணவுக் கோளாறுகள் போன்றவை அடங்கும். இந்த நோய்கள் ஏற்படும் போது குழந்தையின் எலும்புகள் பலவீனமடையலாம்.

இது தவிர, கீமோதெரபிக்குப் பின், மூட்டுவலிக்கான ஸ்டீராய்டுகள், சில வலிப்பு நோய்க் கோரிக்கைகள் போன்றவை குழந்தையின் எலும்புகளை வலுவிலக்கச் செய்யலாம். மேலும் குழந்தைக்கு முன்னதாகவே நோய் இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற்று எலும்பின் அடர்த்தியை பரிசோதித்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Impacts: இளம் மூட்டுவலி கண்களை எவ்வாறு பாதிக்கிறது

இடியோபாடிக்

இந்த வகையில் குழந்தைகளின் ஆஸ்டியோபோரோசிஸ் காரணங்கள் மருத்துவருக்கு தெரியாது. இந்த காரணங்கள், பெண்களை விட ஆண்களிடமே அதிகமாகக் காணப்படும். குழந்தை பருவமடைவதற்கு முன்னரே இந்த நிலை ஏற்படலாம்.

இளம் ஆஸ்டியோபோரோசிஸ் அறிகுறிகள்

குழந்தைகள் அனுபவிக்கும் இளம் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

  • இடுப்பு வலி
  • கீழ் முதுகு வலி
  • நடப்பதில் சிரமம்
  • கணுக்கால்கள் மற்றும் முழங்கால்களில் தொடர் வலி
  • சிறிய காயங்களுடன் கால்களில் அடிக்கடி எலும்பு முறிவுகள் ஏற்படுவது

இந்த வகை அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். எனவே குழந்தைகள் எலும்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்தால், அலட்சியப்படுத்தக் கூடாது. இது இளம் ஆஸ்டியோபெரோசிஸ் ஆக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Juvenile Arthritis Symptoms: குழந்தைகளைப் பாதிக்கும் இளம் மூட்டுவலியின் முக்கிய அறிகுறிகள்

Image Source: Freepik

Read Next

இன்ஃபுளூயன்சா காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Disclaimer