Expert

இன்ஃபுளூயன்சா காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
இன்ஃபுளூயன்சா காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

இன்ஃபுளூயன்ஸா வைரஸ் வகைகள்: 

ஏ, பி, சி மற்றும் டி என  4 வகையான இன்ஃபுளூயன்ஸா வைரஸ்கள் உள்ளன. 

  • இன்ஃபுளூயன்ஸா ஏ வகை வைரஸ்கள் மட்டுமே தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றன. இதன் துணை வகைகளான A (H1N1) மற்றும் A (H3N2) ஆகியவை மனிதர்களிடையே நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடியவையாகும். 
  • இன்ஃபுளூயன்ஸா பி வைரஸ்களுக்கு துணை வகைகள் கிடையாது. அதற்கு பதிலாக B வைரஸ்கள் B/Yamagata அல்லது B/Victoria என பரம்பரையாக பிரிக்கப்படுகிறது. 
  • இன்ஃபுளூயன்ஸா சி வைரஸ்கள் தீவிரமான தொற்றுக்களை உருவாக்குவது கிடையாது. இதனால் பொது சுகாதாரத்திற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.
  • இன்ஃபுளூயன்ஸா டி வைரஸ் கால்நடைகளை பாதிக்கக்கூடியதாகும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. 
who iIssued guidelines for Influenza

இன்ஃபுளூயன்ஸா காய்ச்சல் அறிகுறிகள்: 

இன்ஃபுளூயன்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் வெளியே தென்பட ஆரம்பிக்கும். 

- திடீர் காய்ச்சல்

- வறட்டு இருமல்

- தலைவலி

- தசை மற்றும் மூட்டு வலி

- கடுமையான உடல்நலக்குறைவு

- தொண்டை வலி

- மூக்கு ஒழுகுதல்

இருமல் வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கக்கூடும். 

அதிக பாதிப்பு யாருக்கு? 

கர்ப்பிணிப் பெண்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம், வளர்சிதை மாற்றம், நரம்பியல் வளர்ச்சி, கல்லீரல் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹெச்.ஐ.வி., கீமோதெரபி, ஸ்டெய்ராய்டு மருந்துகளை உட்கொள்வோர் இன்ஃபுளூயன்ஸா நோயால் பாதிக்கப்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்கும். 

இன்ஃபுளூயன்ஸா ஏ வைரஸ் விரைவாக பரவக்கூடியது என்பதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ பணியாளர்கள், நோயாளிகளை பராமரிப்பவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகம். 

who iIssued guidelines for Influenza

யாருக்கெல்லாம் சிகிச்சை கட்டாயம்:  

பொதுவாக இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்திற்குள் தாங்களாகவே குணமடைந்துவிடுவார்கள். ஆனால் கடுமையான அறிகுறிகள் அல்லது பிற மருத்துவ நிலைமைகளால் பாதிக்கப்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெறுவது கட்டாயமாகும். 

லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? 

- மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க வீட்டிலேயே இருக்க வேண்டும்.

- நிறைய திரவங்களை உட்கொள்ளுதல்

- காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். 

கடுமையான அறிகுறிகள் உள்ளவர்கள் விரைவில் வைரஸ் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் யார் என்று விரிவாக பார்க்கலாம். 

- கர்ப்பிணி பெண்கள்

- 59 மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகள்

- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்

- நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

- கீமோதெரபி பெறுவோர்

- எச்.ஐ.வி போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய நோய்க்கு சிகிச்சை பெறுவோர்

தடுப்பு நடவடிக்கைகள்: 

  • இன்ஃபுளூயன்ஸா காய்ச்சலைத் தடுக்க தடுப்பூசி போடுவதே சிறந்தது என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. 
  • பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் மறைந்துவிடும், எனவே காய்ச்சலுக்கு எதிராக பாதுகாக்க வருடாந்திர தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
  • வயதானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது நோயின் தீவிரம் மற்றும் இறப்பை குறைக்க உதவுகிறது. 

யாரெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: 

- கர்ப்பிணி பெண்கள்

- 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள்

- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்

- நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் கொண்டோர்

- சுகாதார ஊழியர்கள்

காய்ச்சலைத் தடுப்பதற்கான பிற வழிகள்:

  • உங்கள் கைகளை அடிக்கடி கழுவி உலர வைக்கவும்
  • இருமல் அல்லது தும்மும் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். 
  • காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தங்களிடம் இருந்து பிறருக்கு பரவுவதை தவிர்க்கும் வகையில் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும்.
  • நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்
  • கைகளால் அடிக்கடி கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

Image Source: Freepik

Read Next

உங்கள் குழந்தைகளை இந்த வேலையை செய்யச் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்