உங்கள் குழந்தைகளை இந்த வேலையை செய்யச் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
உங்கள் குழந்தைகளை இந்த வேலையை செய்யச் சொல்வதால் கிடைக்கும் நன்மைகள்!


குழந்தைகளை மொபைல் போன் கொடுத்து சமாதானப்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. நின்றால் மொபைல், உணவு ஊட்டினால் மொபைல், தூங்க வைத்தால் மொபைல் என அனைத்துக்கும் மொபைல் கொடுத்து குழந்தைகளை தவறான முறையில் வழிநடுத்துபவர்கள் பலர். இதனால் அவர்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை, எப்போதும் மொபைல் போன்களில் பிஸியாக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் ராகி - இதை எந்த மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்?

குழந்தைகளுக்கு மொபைல் கொடுப்பது மிக தவறு

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிவதில்லை, இது குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. குழந்தைகள் மொபைலில் எல்லாவற்றுக்கும் விடை தேட ஆரம்பித்துவிட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில குழந்தைகளிடம் தன்னம்பிக்கையின்மையும் காணப்படுகிறது. குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து சுயசார்போடு வளர்ப்பது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளை சுயசார்புடையவர்களாக மாற்றும் வழிகள்

அலமாரிகளில் ஆடைகளை அடுக்குதல்

குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற, முதலில் அவர்களின் ஆடைகளை ஒழுங்காக வைக்க கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தை தனது ஆடைகளைக் கழற்றி அங்கும் இங்கும் வீசினால், இது தவறு என்று அவருக்குக் கற்றுக் கொடுத்து, துணிகளை எங்கு வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

இதனுடன், குழந்தைக்கு தனது சுத்தமான ஆடைகளை அலமாரியில் எப்படி வைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். குழந்தை தனது ஆடைகளை அலமாரியில் அழகாக ஏற்பாடு செய்தால், அவரைப் புகழ்ந்து பேசுங்கள். பாராட்டுக்களைக் கேட்பது குழந்தையின் மன உறுதியை அதிகரிக்கும், மேலும் அவர் தனது வேலையை இன்னும் சிறப்பாக செய்ய முயற்சிப்பார்கள்.

குடும்பத்துடன் இரவு உணவு

குழந்தைகள் மொபைல் போனில் பிஸியாகி விடுகிறார்கள். சில பெற்றோர்களே மொபைல் போன்களைப் பயன்படுத்தி உணவை சாப்பிடுகிறார்கள், உங்கள் குழந்தையும் இதை செய்தால், இந்த பழக்கத்திலிருந்து விடுபட, அவர்களது உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடச் சொல்லுங்கள். ஒரு குழந்தை தனது குடும்பத்துடன் உணவு உண்ணும் போது, ​​ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்ளும்.

பள்ளிக்கு தயாராகக் கற்றுக்கொடுங்கள்

குழந்தைகள் பள்ளிக்கு தயாராகும் போது ​​அவர்களின் ஆடை முதல் காலணிகள் வரை அனைத்தையும் அணியச் சொல்லுங்கள். காலையில் பள்ளிக்குச் செல்வதற்குத் தேவையான உடைகள், காலணிகள், பைகள் போன்றவற்றைத் தயாராக வைத்திருக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இது அவர்களை பிறரின் நம்பி இருக்கும் தன்மையை குறைக்கும். தங்களது கடமையை உணர வைக்கும்.

அறை சுத்தம் செய்தல்

விளையாடுவதற்கு ஒரு பொம்மையை எடுத்தால், பின்னர் அதை அங்கும் இங்கும் வைக்காமல், பொம்மையை எடுத்த இடத்திலேயே வைக்க வேண்டும் என்று குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். ஆரம்பத்தில் இப்படி செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் புத்தகம் உள்ளிட்ட பொருட்களையும் அப்படியே செய்வார்கள். குழந்தைப் பருவத்தில் இருந்த இந்த பழக்கம் இருந்தால் இது அவர்கள் வளர்ந்த பிறகும் தொடரும்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்த பணிகள் உங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் பிறரை சார்ந்து இல்லாதவர்களாகவும் மாற்றும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.

Image Source: FreePik

Read Next

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது ஸ்மார்ட்போன் யூஸ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்!

Disclaimer

குறிச்சொற்கள்