Sat Sep 12, 2026 | 02:47 AM IST

Angry Kids: குழந்தைகளின் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி தெரியுமா?

Angry Kids: கோபம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஆனால் சில நேரங்களில் இந்த கோபம் உங்கள் உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரிக்கிறது. பெரியவர்கள் தங்கள் கோபம் தவறு என்று சிறிது நேரம் கழித்து உணர்கிறார்கள், ஆனால் குழந்தைகள்?

குழந்தைகள் கோபத்தை மகிழ்ச்சி போன்று ஒரு உணர்வாக வெளிப்படுத்துகிறார்கள். இதுதவறே என்றே பலருக்கும் அவர்களுக்கு புரியாது. இத்தகைய சூழ்நிலைகளில், பல குழந்தைகள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாது. கோபமான உணர்வுகளுக்கும் ஆக்ரோஷமான நடத்தைக்கும் உள்ள வித்தியாசத்தை குழந்தைகள் புரிந்துகொள்வது கடினம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகளின் கோபத்தைக் கட்டுப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகிறது. குழந்தைகள் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி என நிபுணர்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்.

குழந்தைகளின் கோபத்தை எப்படி சமாளிப்பது?

குழந்தைகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம்

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற விரும்புகிறார்கள், அவ்வாறு செய்வதில் தவறில்லை. இருப்பினும் குழந்தையின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதன் மூலம், நீங்கள் அவரை பிடிவாதமாகவும் கோபமாகவும் ஆக்குகிறீர்கள்.

குழந்தைகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் இணங்குவதன் மூலம், ஒரு சில தந்திரங்களைக் காட்டுவதன் மூலம் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும் என்று அவர்கள் உணருவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்நேரமும் இப்படித்தான் நடந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

குழந்தைகள் கோபமாக இருக்கும் போது நீங்களும் ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது

due-to-this-reason-your-little-child-can-also-get-a-heart-attack

குழந்தை கோபமாக இருக்கும் போது நீங்களும் கோபமாக நடந்து கொள்ளாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குழந்தைகளிடம் கோபப்படுவதை விட மென்மையாக நடந்து கொள்வதே குழந்தைகளின் கோபத்தை தணிக்க சிறந்த வழி.

குழந்தைகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதை நிதானமாகவும் மென்மையாகவும் கற்பிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டால், அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள முடியாது, மாறாக அவர்களின் ஆக்ரோஷ நிலை மேலும் அதிகரிக்கும்.

குழந்தையை அப்படியே ஆக்ரோஷமாக விட்டுவிடாதீர்கள்

உங்கள் குழந்தை இளமையாகவும், பிடிவாதமாகவும் இருந்தால், அவர்களைக் கட்டிப்பிடிப்பது, அன்பான கவனம் செலுத்துவது போன்ற உடல் ரீதியான தொடுதலைப் பயன்படுத்தி அவர்களை அமைதிப்படுத்தலாம்.

அதேபோல் குழந்தை வளர்ந்து, அவருடைய கோபத்தை நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால், அவருடன் நேரத்தை செலவிடுங்கள், அவருடன் பேசுங்கள் மற்றும் அவரை அமைதிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் எதிர்கால இந்தியா என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வளர்ப்பதோடு மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வளர்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

Pic Courtesy: FreePik

Read Next

Baby Food: 7 மாத குழந்தைக்கு என்ன உணவு அளிக்கலாம்? இது ரொம்ப முக்கியம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

M Karthick

M Karthick

Senior Sub Editor

செய்தியாளர், செய்தி ஆசிரியர் என பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன். ஆரோக்கிய நலன், அழகு பராமரிப்பு, பெற்றோர் குழந்தைகள் நலன், சினிமா உள்ளிட்டவைகளை ஆராய்ந்து கற்றறிந்து எழுத விரும்புபவன். தான் பதிவிடும் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவேன். கருத்தரங்கில் பங்கேற்கவும் புத்தகம் படிக்கவும் பிடிக்கும். தனது செய்தியை படிக்கும் பயனருக்கு அதுசார்ந்த தகவலில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content