Baby Food: 7 மாத குழந்தைக்கு என்ன உணவு அளிக்கலாம்? இது ரொம்ப முக்கியம்!

  • SHARE
  • FOLLOW
Baby Food: 7 மாத குழந்தைக்கு என்ன உணவு அளிக்கலாம்? இது ரொம்ப முக்கியம்!


Baby Food: பொதுவாக 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்பால் என்பது பிரதானம் அதற்கு பிறகு சிலரும், அதற்கு முன்பே சிலரும் நிறுத்துவது உண்டு. ஆனால் 6 மாதம் என்பது நிலையான ஒன்று. குழந்தைகளும் 6 மாதத்திற்கு பிறகு சில செயல்முறைகளை தொடங்குகிறார்கள். அதாவது தாங்களாகவே எழுவது, ஆதரவின்றி அமருவது போன்ற செயல்களை தொடருவார்கள்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு ஏற்ற உணவை அளிக்க வேண்டியது அவசியம். 6 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் தேவை. எனவை அவர்களுக்கு திட உணவுகளை வழங்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளுக்கான உணவு மிக அவசியம்

இந்த காலக்கட்டத்தில் பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தை சரியாக உணவை எடுத்துக் கொள்வதில்லை என பெற்றோர்களிடம் புகார் அளிப்பது உண்டு. இதை சரிசெய்யவும் குழந்தைகளுக்கு என்னமாதிரியான உணவை அளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த பட்டியலில் பார்க்கலாம்.

7 மாத குழந்தைக்கான உணவு பட்டியல்

7 மாத குழந்தைக்கு காலை 7 முதல் 8 மணிக்கு எழுந்தவுடன் உடனடியாக தாய் பால் அல்லது ஃபார்முலா பால் கொடுக்க வேண்டும்.

இரவு 8 முதல் 10 மணி வரை: குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்கக் கூடிய கிச்சடி போன்ற உணவை அளிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்திருந்தால், ஒரு நாளைக்கு கால் கப் கஞ்சி அல்லது கிச்சடி போன்றவை கொடுக்கலாம்.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை: உங்கள் குழந்தைக்கு ஒரு முறை திட உணவை கொடுத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவருக்கு இப்போது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலை மட்டும் கொடுங்கள்.

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை: இந்த நேரத்தில் நீங்கள் குழந்தைக்கு பருப்பு தண்ணீர், பருப்பு சூப், வாழைப்பழம் அல்லது பப்பாளி மசிப்பு அல்லது வேறு ஏதேனும் பழக் கூழ் வகைகளை கொடுக்கலாம்.

மாலை 4 மணி முதல் 7 மணி வரை: குழந்தைகள் உணவை உண்பதற்கு முன் அவர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைக்கு லேசான காய்கறி ஸ்மூத்தி, ஓட்ஸ் கீர் அல்லது பட்டாணி ப்யூரி வகைகளை கொடுக்கவும்.

குழந்தைகள் ஒரு வகை உணவை சாப்பிடுவதில்லை என்று மருத்துவர் கூறுகிறார். எனவே, அவர்களுக்காக ஏதாவது வெரைட்டி உணவை குடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ணவில் அதிக வண்ணங்களைச் சேர்க்கவும், இதனால் குழந்தை அதன் மீது ஈர்க்கப்பட்டு உணவை மேலும் கோருகிறது.

ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் கர்ப்ப காலத்திலும், குழந்தைகள் விஷயத்திலும் மட்டும் எப்போதும் சமரசம் என்பதே வேண்டாம். எந்தவொரு விஷயத்தையும் அதன் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Pic Courtesy: FreePik

Read Next

Baby Sleep Tips: குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுகிறதா? காரணம் இதுவாக இருக்கலாம்!

Disclaimer

குறிச்சொற்கள்