$
Child Growth Nutrient Foods: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்வது அவசியமாகிறது. எனவே சரியான ஊட்டச்சத்துக்களை சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் இவை அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக அமைகிறது. சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்குவது குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆரோக்கியம், அறிவாற்றல் செயல்பாடு, மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை ஆதரிக்கிறது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த சீரான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவது அவர்களின் எலும்பு வலுவாக, ஆரோக்கியமான உறுப்புகள் மற்றும் வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், குழந்தைகளின் உணவில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்குக் குறிப்பாக எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதையும், அன்றாட உணவில் அவற்றை எவ்வாறு சேர்ப்பது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஊட்டச்சத்துடனும் வளர்வதை உறுதிசெய்ய முடியும். இதில் குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகள் என்னென்ன என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Kids Bone Strength Tips: உங்க குழந்தைகளின் எலும்பு ஸ்ட்ராங்கா இருக்க என்ன செய்யணும்?
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்
கால்சியம்
கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு இன்றியமையாததாகும். அதன் படி, பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் இலை கீரைகள் இது தவிர, வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. இதில் தயிர் அல்லது பாலாடைக்கட்டியைக் குழந்தைகளுக்குச் சிற்றுண்டியாக வழங்கலாம். பாலை ஸ்மூத்திகளில் சேர்த்துக்கொடுக்கலாம். மேலும், சாலட்கள் அல்லது பக்க உணவுகளில் இலை கீரைகளைச் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவ்வாறு அவர்களின் அன்றாட உணவில் கால்சியம் சத்துக்களைச் சேர்ப்பது குழந்தைகளின் உகந்த எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

வைட்டமின் ஏ
கண் பார்வை, சரும ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்க வைட்டமின் ஏ உதவுகிறது. அதன் படி, கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை போன்றவை வைட்டமின் ஏ நிறைந்த சிறந்த ஆதாரங்களாகும். எனவே குழந்தைகளுக்கு அன்றாட உணவில் கேரட் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கைச் சேர்க்கலாம். மேலும், சாலடுகள் அல்லது சூப்களில் கீரையைப் பயன்படுத்தலாம். இவ்வாறு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை வளரும் குழந்தைகளுக்குக் கொடுப்பது அவர்களின் கண் பார்வை மற்றும் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வைட்டமின் சி
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிறந்த மூலங்களில் ஒன்று வைட்டமின் சி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த ஊட்டச்சத்துக்கள் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரிகள், சிட்ரஸ் பழங்கள், ப்ரோக்கோலி மற்றும் பெல் பெப்பர்ஸ் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குடைமிளகாயை சாலட்களுடன் சேர்ப்பதன் மூலமும், ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரிகளை தின்பண்டங்களாக வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்கலாம். மேலும், இவை நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உணவுகள்!
வைட்டமின் டி
கால்சியம் உறிஞ்சுதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி உட்கொள்ளல் மிகவும் முக்கியமானதாகும். அவ்வாறே முட்டையின் மஞ்சள் கரு, கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் போன்ற உணவுகளில் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது தவிர, இயற்கையாகவே வைட்டமின் டி உற்பத்தி செய்ய சூரிய ஒளியின் மூலம் பெறலாம். உணவில் முட்டை, மீன் வகைகளைச் சேர்ப்பதன் மூலம், வெளியில் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரத்தில் விளையாடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். இவை எலும்பு ஆரோக்கியத்திற்கும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையானதாகும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியமானவை ஆகும். இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆளிவிதை, சியா விதைகள் போன்ற விதைகளிலும், கொழுப்பு நிறைந்த மீன், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றிலும் கிடைக்கிறது. எனவே குழந்தைகளுக்கு சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை வாரத்திற்கு சில முறை வழங்கலாம். மேலும், ஆளிவிதை, சியா விதைகள் போன்றவற்றை ஸ்மூத்திகளில் சேர்த்துக் கொடுப்பதன் மூலமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைப் பெற வைக்க முடியும். இது தவிர, அறிவாற்றல் வளர்ச்சியை ஆதரிக்க சாலட் அல்லது சிற்றுண்டிகளில் அக்ரூட் பருப்புகள் சேர்க்கலாம்.

புரதம்
வளர்ச்சி, திசு சரிசெய்தல் மற்றும் நோய் எதிர்ப்புச் செயல்பாடு உள்ளிட்ட பலதரப்பட்ட செயல்பாடுகளுக்கு புரதம் அவசியமான ஒன்றாகும். அதன் படி, புரதம் நிறைந்த மீன், முட்டை, மெல்லிய இறைச்சிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காலை உணவில் முட்டைகள், சூப்கள் போன்றவற்றை அளிப்பதன் மூலம் இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறமுடியும். இவை குழந்தைகளுக்குத் தேவையான புரதத்தைப் பெறுவதை உறுதி செய்து வளர்ச்சி மேம்பாட்டிற்கு உதவுகிறது.
இந்த வகை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை உட்கொள்வது குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.
Image Source: Freepik