Height Increase Food List: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இந்த உணவெல்லாம் கொடுங்க

  • SHARE
  • FOLLOW
Height Increase Food List: உங்க குழந்தை உயரமா வளரணுமா? இந்த உணவெல்லாம் கொடுங்க


Height Increase Food For Children: குழந்தைகளின் வளர்ச்சி அவர்களின் மரபணுக்களைப் பொறுத்தே அமைகிறது. எனினும் வளர்ச்சியில் உணவு முறையும் பங்கு வகிக்கிறது. பொதுவாக குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவத்தின் பிற்பகுதி வரை உயரம், எடை மற்றும் பிஎம்ஐ போன்றவற்றில் உள்ள மாறுபாட்டை விளக்குவதில் மரபியல் பெருகிய முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் உயரம் அடைவதற்கு சில உணவுகள் உதவுகிறது.

உயரத்திற்கான தேவையான ஊட்டச்சத்துக்கள்

உயரத்திற்கும் எடுத்துக் கொள்ளும் உணவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். உயரத்திற்கும், உணவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆய்வு ஒன்றில் பால் உணவுகள், கோழி இறைச்சி மற்றும் இன்னும் பிற விலங்கு சார்ந்த உணவுகளை உட்கொள்ளலாம். இது குழந்தைகளை உயரமாக மாற்ற உதவுகிறது. இதில் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Food For Kids: உங்க குழந்தையோட சீரான வளர்ச்சிக்கு இந்த 5 உணவுகள் கட்டாயம்!

குழந்தைகள் உயரமாக வளர உதவும் உணவுகள்

முட்டை

முட்டைகள் புரதங்களின் நல்ல மூலமாகும். வெள்ளை அல்புமினில் 100 சதவீதம் அளவிலான புரதம் நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு நிறைந்துள்ளதால் இதனை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முட்டையில் வைட்டமின் பி2 நிறைந்துள்ளது. இது ரிபோஃப்ளேவின் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே குழந்தையின் உயரத்தை அதிகரிக்க குழந்தைகளின் சிறுவயது முதலே 2 முதல் 4 முட்டைகளைச் சேர்க்கலாம்.

இலை காய்கறிகள்

கீரை போன்ற அடர் பச்சை இலை காய்கறிகளில் வைட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம், மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. எனவே குழந்தைகள் உயரமாக வளர பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மீன்

மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு மிகவும் மதிப்புமிக்கதாகும். மேலும் இதில் இரும்பு, கால்சியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது. குழந்தையின் உடல் உயரத்தை அதிகரிப்பதுடன், இதய ஆரோக்கியம், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதிலும் பங்கு வகிக்கிறது.

சோயாபீன்

சோயாபீன்களில் அதிகளவு புரதங்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள தூய புரதம் எலும்பு மற்றும் திசு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகள் உயரத்தை அதிகரிக்க தினந்தோறும் 50கிராம் அளவு சோயா பீன்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்கள் புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோயாபீன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Children’s Unhealthy Foods: குழந்தைகளுக்கு கட்டாயம் இந்த உணவையெல்லாம் கட் பண்ணனும்

வாழைப்பழம்

குழந்தையின் உயரத்தை அதிகரிக்க மிக முக்கிய பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி6, சி, ஏ மற்றும் ஆரோக்கியமான ஃப்ரீ பயாடிக்குகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தையின் உயரத்தை அதிகரிக்க கொடுக்க வேண்டியவற்றுள் இது புறக்கணிக்க முடியாத ஒன்றாகும்.

மாவுச்சத்து மற்றும் தானிய வகைகள்

உடலின் மிக முக்கிய ஆதாரங்களாக விளங்குவது மாவுச்சத்து மற்றும் தானிய வகைகள் ஆகும். இவை வைட்டமின் பி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவை உடலுக்குத் தேவையான கலோரிகளை வழங்குவதுடன், குழந்தைகளின் விரைவான வளர்ச்சிக்கு உதவுகிறது. முழு கோதுமை, முழு தானிய பாஸ்தா, பழுப்பு அரிசி போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

இந்த வகை உணவுகள் அனைத்தும் குழந்தைகள் உயரமாக வளர உதவுகிறது. எனினும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய உணவு முறைகளைத் தேர்ந்தெடுக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய உணவுகள் இது தான்.!

Image Source: Freepik

Read Next

குழந்தைகளுக்கான டீஹைட்ரேஷன் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

Disclaimer