குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது ஸ்மார்ட்போன் யூஸ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்!

  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது ஸ்மார்ட்போன் யூஸ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்!


குழந்தைக்கு எந்த வயதாக இருந்தாலும் சரி. உண்மையான விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தை மொபைல் பார்க்கும் போது உணவை சாப்பிட்டால், அது அவரது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து நவி மும்பையில் உள்ள மெடிகேர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான டாக்டர் நர்ஜோஹன் மெஷ்ராம் கூறிய தகவலை பார்க்கலாம்.

குழந்தைகள் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

அடிமையாதல்

நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைக்கு உணவளிக்கும் போது மொபைல் காட்டும் செயல்முறை தொடர்ந்தால், அது குழந்தைக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். உண்மையில், குழந்தைகள் தினசரி மொபைல் பார்ப்பதால் அதற்கு அடிமையாகலாம். குழந்தைப் பருவத்தில் இந்த பழக்கத்தை தொடங்குவது என்பது அதீத தவறான வழியாகும்.

குழந்தைகள் கட்டுபாடின்றி உணவை சாப்பிடுவார்கள்

மொபைல் காட்டி உணவு ஊட்டுவதால் குழந்தைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுகிறார்கள். சாப்பாட்டில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. அதே சமயம், தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது கைபேசியைக் காட்டினால், குழந்தைகள் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் என்பது புரியாது.

இதன் காரணமாக, பல நேரங்களில் அவர்கள் மிகக் குறைந்த உணவை உண்கிறார்கள் அல்லது அதிகமாக சாப்பிடுகிறார்கள். சில சமயங்களில் குழந்தைகளுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்றே தெரியாது.

உணவின் சுவை புரியாது

உணவை வாயில் எடுத்தவுடனே நாம் முதலில் உணர்வது அதன் சுவைதான். அதன்மூலமாக தான் நாம் உண்ணும் உணவு நமக்கு பிடித்தவையா அல்லது இல்லையா என்பது தெரியவரும். அதேசமயம், சிறு குழந்தைக்கு மொபைல் போன் காட்டி உணவளித்தால், அவர் சாப்பிடுவது சுவையாக உள்ளதா, இல்லையா என்பதே தெரியாமல் போகிவிடும். உணவை ஏதோ கடனுக்கு என வேண்டாவிருப்பாக சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.

மொபைலைப் பார்த்துக்கொண்டே குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு பிடிக்காவிட்டாலும். தினமும் மொபைலைக் காட்டி உணவு ஊட்டுவது குழந்தைகளின் சுவைத் தன்மைக்கு நல்லதல்ல.

குடும்ப தொடர்பு இல்லாமல் போகும்

இந்த டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு வரை அனைவரும் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது வழக்கம். இரவு உணவு என்பதே குடும்ப நேரமாக இருந்தது. இதன் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். இதனால் குடும்ப பந்தமும் வலுப்பெற்றது. ஆனால், இப்போது இரவு உணவு நேரத்தில் இதுபோன்ற விஷயங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

உங்கள் குழந்தைக்கு உணவளிக்கும் போது உங்கள் மொபைலைக் காட்டினால் அவர்கள் கவனம் அதில்தான் இருக்கும். பெற்றோருடனான உரையாடலை தவிர்க்கத் தொடங்குவார்கள். காலப்போக்கிலும் இந்த பழக்கம் அவர்களை ஒட்டிக் கொள்ளும்.

குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்கள் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம்.

  1. குழந்தைக்கு உணவளிக்கும் போது, ​​அவரிடம் நிறைய பேசுங்கள்.
  2. குழந்தைக்கு பசி எடுக்கும் போது மட்டுமே உணவளிக்கவும்.
  3. சாப்பிடும்போது மொபைலைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினால், அதை அலட்சியப்படுத்துங்கள்.
  4. அவர் என்ன சாப்பிட விரும்புகிறார் என்பதைப் பற்றி குழந்தையுடன் பேசுங்கள்.
  5. நீங்கள் சாப்பிடும் போதும் உங்கள் மொபைலை பார்க்கவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், குழந்தைகள் எப்போதும் பெற்றோரை தான் பின்பற்றுவார்கள்.

Image Source: FreePik

Read Next

Child Health: குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?

Disclaimer

குறிச்சொற்கள்