Influenza Flu Preventions: மக்களே உஷார்.! பயமுறுத்தும் இன்புளூயன்சா ப்ளூ.!

  • SHARE
  • FOLLOW
Influenza Flu Preventions: மக்களே உஷார்.! பயமுறுத்தும் இன்புளூயன்சா ப்ளூ.!


இன்புளூயன்சா ஃபுளூ காய்ச்சல் அறிகுறிகள் (Influenza Flu Symptoms)

உங்களை உடல் சோர்வு, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, பேதி, மூடு வலி போன்றவை ஒன்று சேர்ந்து பாடாய் படுத்துகிறது? அப்போ உங்களுக்கு இன்புளூயன்சா ஃபுளூ காய்ச்சல் இருக்க வாய்ப்பிருக்கு. இவை Influenza Flu அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் வேறு காரணங்களாலும் தோன்றலாம். மேலும் தற்போது விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பொய்து வருவதால் இந்த நோய் அதிகம் பரவுகிறது. ஆகையால் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தோன்றினாலும், உடனடியாக மருத்துவரை அணுகவும். 

இன்புளூயன்சா ஃபுளூ வகைகள் (Influenza Flu Types)

Influenza Flu A,B,C,D என நான்காக வகைப்படுத்தப்படுகிறது. இதில் A மற்றும் B வகை  இன்புளூயன்சா ஃபுளூ காய்ச்சலானது, பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சலால் தோன்றுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை குறிவைத்து தாக்கும். இந்த நான்கு வகைகளும் இருமல் மற்றும் தும்மல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் ஈஸியாக பரவும். 

யாரையெல்லாம் இன்புளூயன்சா ஃபுளூ தாக்கும் தெரியுமா?

எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படலாம். இவர்கள் Influenza Flu அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை சந்தித்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்காதீர்கள். ஏனெனில் இது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுக்கும். 

குறிப்பாக குழந்தைகள் மீது தனிபட்ட கவனம் தேவை. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் வளர்ந்து வரும் நேரம். ஆகையால் அவர்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இதனால் எல்லா தொற்றுகளும் எளிமையாக பரவும். 

இன்புளூயன்சா ஃபுளூ தடுப்பு (Prevention Of Influenza Flu)

* வெளியே செல்பவர்கள் மாஸ் அணிந்து செல்லவும்.

* இருமல், தும்மல், சளி, காய்ச்சல் உள்ளவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள். 

* தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, பின் அதை வெதுவெதுப்பான நிலை வரும் வரை ஆர வைத்து குடிக்கவும். 

* எப்போதும் சேனிடைசரை கையில் வைத்துக்கொள்ளவும்.

* வெளியே சென்று வீடு திரும்பிய உடன், கை கால்களை சோப்பு போட்டு கழுவவும்.

* வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

* உணவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போதே சாப்பிடவும்.

Image Source: Freepik

Read Next

OCD: இந்த அறிகுறிகள் இருந்தால்… உங்களுக்கு இந்த விசித்திர நோய் இருக்கலாம்!

Disclaimer