வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என நினைப்பது ஆரோக்கியமானது. ஆனால் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது போல் தொட்டதுக்கு எல்லாம் சுத்தம் பார்ப்பது, சுத்தத்தை திரும்ப திரும்ப பரிசோதிப்பது போன்றவை எல்லாம் OCD என அழைக்கப்படும் விசித்திரமான நோயின் அறிகுறிகள் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓசிடி என்றால் என்ன?
ஒசிடி என்பது அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டரைக் குறிக்கிறது. இந்த கான்செப்ட்டில் பல திரைப்படங்கள் வந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கைகளை அடிக்கடி கழுவது, கதவு, லிப்ட் பட்டன்கள், பொது போக்குவரத்து இருக்கைகள் என அனைத்தையும் நன்றாக சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்துவது என ஓவர் சுத்தம் பார்ப்பார்கள்.
OCD-க்கான முழுமையான காரணம் தெரியவில்லை என்றாலும், மூளையின் சில பகுதிகள் செரோடோனின், சில நரம்பு செல்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள உதவும் இரசாயனத்திற்கு பதிலளிக்காததால் ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். OCD மரபணு ரீதியாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் வீட்டில் உள்ள உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களில் ஒருவருக்கு OCD இருந்தால், மற்றவர்களுக்கும் OCD வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
OCD-ன் சில ஆரம்ப அறிகுறிகள் இதோ…
- அளவுக்கு அதிகமாக கைகளை கழுவுதல்:

கைகளை சுத்தமாக வைத்திருப்பது ஆரோக்கியமான பழக்கம். இது வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால் அதிகப்படியான சுத்தம் OCD இன் அறிகுறியாகும். உங்கள் கைகளை ஒரு நாளைக்கு பலமுறை கழுவும் பழக்கம் இருந்தால் அல்லது பலமுறை சானிடைசரைப் பயன்படுத்தினால், அது ஆபத்தாகும்.
- திரும்ப, திரும்ப செக் செய்வது:
நார்மலாக வீட்டை விட்டு கிளம்பும் போது கதவை பூட்டிவிட்டோமா, விளக்குகள் மற்றும் அடுப்புகளை ஆஃப் செய்துவிட்டோமா என செக் செய்வது நார்மலானது. ஆனால் ஒருமுறைக்கு பலமுறை திரும்ப, திரும்ப பரிசோதிப்பது ஓசிடியின் முக்கிய அறிகுறியாகும். பயம் காரணமாக இந்த பரிசோதனை மனநிலை தூண்டப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
- எதையும் எண்ணி, எண்ணி செய்வது:
ஓசிடி (OCD) உள்ளவர்கள் சாதாரண மனிதர்களைப் போல் நடந்து கொள்ளமாட்டார்கள், எதையும் எண்ணி, எண்ணி செய்வார்கள். உதாரணமாக, படிக்கட்டுகளில் ஏறும் போது எண்ணுவது அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்வது போன்றவையாகும். மேலும் எப்போதும் செய்யும் விஷயத்தை அதே ஆர்டரில் செய்யாவிட்டால் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்ற மூடநம்பிக்கையும் அவர்களிடம் இருக்கும்.
4.வரிசையை மாற்ற மாட்டார்கள்:
இதையும் படிங்க: நீங்க அலாரம் வச்சி எழுந்திருப்பீங்களா?… அப்போ ஜாக்கிரதையா இருங்க!
ஓடிசி பிரச்சனை உள்ளவர்கள் டேபிளில் உள்ள சின்ன பொருளை சற்றே சாய்வாக வைத்தாலும் பிடித்தாலும், அதனை சரியான திசையில் வைத்தால் தான் நிம்மதி பிறக்கும். உதாரணமாக வழக்கமான செல்போனை மேசையின் இடது பக்கத்திலும், வாட்டர் பாட்டிலை வலது பக்கத்திலும் வைக்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள், அதை யாராவது இடம் மாற்றிவிட்டால் கெட்ட கோபம் வரும்… மேலும் அதனை அதே பொசிஷனுக்கு மாற்றினால் தான் நிம்மதி அடைவார்கள்.
- அனைத்தும் சரியாக இருக்க வேண்டும்:
பொருட்களை ஒழுங்கமைப்பது, சுத்தம் மட்டும் ஓசிடி பிரச்சனை அல்ல, தங்களது தோற்றத்திலும் அதிக அக்கறை செலுத்துவார்கள். பார்க்க எப்போதும் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றத்துடன் காட்சியளிக்க விரும்புவார்கள். குறிப்பாக மூக்கின் தோற்றம், சிரிப்பின் தோணி என உடல் உறுப்புகளில் கூட கவனம் செலுத்துவார்கள்.
இந்த அறிகுறிகள் அடிக்கடி தோன்றினால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: Freepik