Does Covid Vaccine Cause Sudden Death: கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் பலர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணித்த செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. அதுவும் கோவிட் காலகட்டத்திற்கு பின்னர் இது அதிகரித்து வருகிறது.
ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போதே திடீரென மயங்கி விழுந்து இறப்பது, மேடையில் ஆடிக்கொண்டிருக்கும்போதே திடீரென கீழே விழுந்து இறப்பது, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணிப்பது போன்ற பல வீடியோக்கல் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் கோவிட் காலத்திற்கு பிறகு, இது போன்ற இழப்புகள் ஏற்படுவதால், கோவில் தடுப்பூசி (Covid Vaccine) தான் இதற்கு காரணம் என்ற பீதி மக்கள் இடையே நிலவி வருகிறது.
இது தொடர்பாக, இந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இளைஞர்களின் திடீர் மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேது வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 18-ல் இருந்து, 45 வயதினர் வரை மாரடைப்பால் இறந்ததற்கு, குடும்ப வரலாறு போன்ற வேறு சில காரணங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே ஏற்பட்ட மாரடைப்புக்கு, வாழ்க்கை முறை மற்றும் சில பழக்கங்கள் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகையால், மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ICMR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Image Source: Freepik