சேவல், குருவி சத்தத்தைக் கேட்டு கண் விழித்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் அதிகாலையில் எழுந்திருக்க அலாரம் வைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் வீட்டில் இருந்தாலும் சரி, காலையில் அலுவலகம் சென்றாலும் சரி, அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

இருப்பினும், அலாரம் வைத்து எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு சில நோய்கள் வரும் அபாயம் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்னென்ன மாதிரியான பிரச்சனைகள் என அறிந்து கொள்ளுங்கள்…
இதயத்திற்கு நல்லதல்ல:
அலாரம் வைத்து எழுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஜப்பானின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் ஹெல்த் ரிசர்ச் படி,அலாரம் சத்தம் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அலாரம் ஒலி இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது. அலாரம் ஒலி இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அட்ரினலின் மற்றும் மன அழுத்த அளவையும் அதிகரிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
உடல் கடிகாரத்தை பாதிக்கும்:
நமது உடலுக்குள் ஏற்கனவே 24 மணி நேர கடிகாரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இது 24 மணிநேர உள் கடிகாரமாகும், இது தூக்கம்-விழிப்பு முறைகள் உட்பட பல்வேறு உடலியல் செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது.
எனவே அலாரம் சத்தம் கேட்டு எழுந்தால்.. உங்களின் தூக்க சுழற்சி தடைபடுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டு திடீரென பதறியடித்து எழுவது மனநிலையை பாதிக்கிறது.
அழுத்தத்தை அதிகரிக்கும்:
அலாரம் சத்தத்துடன் எழுந்தால்.. மன அழுத்தம் அதிகரிக்கிறது. கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் உடனடி அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கு அவசியமானவை என்றாலும், இந்த ஹார்மோன்கள் அதிகமாக வெளியிடப்படும்போது, மன அழுத்தம் அதிகரிக்கிறது. மன அழுத்த ஹார்மோன்களின் திடீர் அதிகரிப்பு.. உயர் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
மனநிலை சீர்குலையும்:
அலாரம் சத்தம் கேட்டு எழுந்தால், அது உங்கள் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நிம்மதியான தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அலாரத்தால் உங்கள் தூக்கம் தடைபட்டால்.. நீங்கள் எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை உணரலாம், இது மறைமுகமாக உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
image source:Freepik