Flu Fever Prevention: பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Flu Fever Prevention: பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?


Tips To Prevent Flu Fever: குளிர்காலம் வந்துவிட்டாலே பல்வேறு நோய்த்தொற்றுக்களும் பரவ ஆரம்பிக்கின்றன. மேலும், இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளது. இது எளிதில் தொற்றுக்களால் பாதிப்பதாக அமைகிறது. அந்த வகையில், தற்போது கோவை மாவட்டத்தில் ஃப்ளூ காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இந்த ஃப்ளூ காய்ச்சலால், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்பட வாய்ப்புண்டு. இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் மூக்கில் நீர் வடிதல், உடல் வலி, தலைவலி, இருமல் போன்றவை காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாள்களில் குணமடைந்து விடுவர். எனினும், இந்த ஃப்ளூ காய்ச்சல் வராமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதைக் குறிக்கும் வழிமுறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த பேரீச்சம்பழ ஸ்மூத்தியை குடியுங்கள்!

ஃப்ளூ காய்ச்சல் வராமல் தவிர்க்க உதவும் குறிப்புகள் (Tips To Prevent Flu Fever)

ஃப்ளூ காய்ச்சலில் இருந்து விடுபட சில பாதுகாப்பான நடைமுறைகளைக் கையாள வேண்டும்.

முகக்கவசம் அணிவது

ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளாக இருமல், தும்மல் போன்றவை ஏற்படலாம். இருமலின் போதும், தும்மலின் போதும் மற்றவர்களுக்குக் காய்ச்சல் பரவாமல் இருக்க கைக்குட்டை அல்லது துணியால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். மேலும், ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி, கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

வெந்நீர் அருந்துதல்

இந்த குளிர்காலத்தில் நோய்த்தொற்றுக்கள் எளிதில் பரவுவதால், குடிநீரை நன்றாகக் கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குடிக்க வேண்டும். மேலும், தொண்டையில் கரகரப்பு இருப்பின், சமையல் கல் உப்பை வெந்நீரில் சேர்த்து, அந்த நீரை தொண்டையில் படுமாறு வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

ஆரோக்கியமான உணவு வகைகள்

வைட்டமின் சி மற்றும் புரதச்சத்து மிகுந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இவை வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உதவும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பொறித்த உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

மருத்துவரை அணுகுதல்

மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளியைக் கடைபிடிப்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பிய பின்னரும், மற்ற வேலைகளைச் செய்து பின்னரும் கை மற்றும் கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவிக் கொள்ள வேண்டும். மேலும் ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரை அணுகி உரிய அறிவுரைகளைப் பெற்ற பின்னரே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Pulmonary Hypertension Effects: நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் இத்தனை பாதிப்பு ஏற்படுமா?

Image Source: Freepik

Read Next

Dog Bite Treatment: வீட்டில் வளர்க்கும் நாய் கடித்தாலும் ஊசி போடுவது அவசியமா?

Disclaimer