குளிர்காலத்தில், குளிரில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஸ்வெட்டர், லெதர் ஜாக்கெட் போன்ற ஆடைகளை அணிவது பொதுவானது. ஆனால் வெளிப்புற உடலைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தும் பலர், உடலின் உட்புற ஆரோக்கியத்தில் தவறு செய்கின்றனர்.
ஜலதோஷத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற பலர் டீ மற்றும் காபி அதிகம் குடிப்பார்கள். அது எவ்வளவு நல்லது? குளிர்காலத்தில் எடுக்க வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இந்த காலகட்டத்தில் என்ன வகையான உணவை உட்கொள்ள வேண்டும்? இந்த அனைத்து விஷயங்களிலும் நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்கள் இதோ…
குறைவான தண்ணீர் குடிப்பது:
குளிர் காலம் வந்துவிட்டாலே போதும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பயந்து பெரும்பாலானா மக்கள் செய்யும் தவறு, குறைவான அளவு தண்ணீர் குடிப்பதாகும். சிலர் குளிர் காலத்தில் தாகம் எடுப்பதில்லை எனக்கூறி தண்ணீர் குடிப்பதை தவிர்க்கின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது மிகவும் தவறு என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடலை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். நீரேற்றம் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமத்தை பளபளப்பாக மாற்றும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக அளவில் கஃபின் உட்கொள்ளுதல்:
அடிக்கிற குளிருக்கு சுடச்சுட டீ, காபி குடித்தால் ஈதமாக இருக்கும் என நினைப்பவர்கள் ஏராளம். இதனால் உடலில் காஃபின் அளவு அதிகரிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் நீர்ச்சத்து குறைபாடு, தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்னைகள் வரலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ஆரோக்கியமாக இருக்க காஃபின் உட்கொள்ளலைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
நொறுக்குத் தீனிகளை அதிகமாக உண்பது:
குளிர் காலத்தில் பெரும்பாலானோர் செய்யும் மற்றொரு தவறு, எண்ணெயில் பொறித்த சூடான பலகாரங்கள், ஜங்க் ஃபுட், பேக்கரி உணவுகள் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
குறிப்பாக உடல் பருமன், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் தான் முடிந்தவரை ஜங்க் ஃபுட் உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிக கார்ப் உணவுகள்:
குளிர்காலத்தில் செரோடோனின் (நம் மனநிலைக்கு காரணமான ஹார்மோன்) அளவு குறைகிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால், கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஆசை நமக்கு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால்.. நீண்ட காலத்திற்கு உடல்நலப் பிரச்சினைகள் வரும் (Health issues in Winter). அதனால்தான் கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சூப் தயாரிப்பதில் தவறுகள்:
பலர் குளிர்காலத்தில் சூடான சூப் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் சூப் தயாரிப்பதில் பலர் தவறு செய்கிறார்கள். குளிர்காலத்தில் சூப்பில் ஆரோக்கியமான பொருட்களை கலந்து சாப்பிடுவது நல்லது.
அதோடு.. குளிர்காலத்தில் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால், அந்த பருவத்திற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
Image Source: Freepik