‘ஜில்லுன்னு காத்து… ஜன்னலை சாத்து..” என வாட்டி வதைக்கும் குளிர் காலமும் வந்துவிட்டது. இந்த பருவத்திலும் ஐஸ் வாட்டர் குடித்தால் மட்டுமே தாகம் தணியும் எனும் ஐஸ் வாட்டர் பிரியர்கள் ஏராளம். குளிர் காலத்தில் ஐஸ் வாட்டர் அல்லது குளிர்ச்சியான நீரை பருகி மூக்கடைப்பு, சளி, இருமல், காய்ச்சல் என பல பிரச்சனைகள் வந்தாலும், இரண்டு ஒரு நாட்கள் மாத்திரை போட்டுக்கொண்டு உடம்பு சரியானதும் மீண்டும் அதே தண்ணீரை குடிப்பவர்களும் உண்டு.
இவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலுக்கு ஏற்படக்கூடிய முழுமையான தீமைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள். ஐஸ் வாட்டர் குடித்தால் சளி, இருமல், காய்ச்சல் வரும் இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும் என நினைப்போர் கவனத்திற்கு… குளிர் காலத்தில் ஐஸ் வாட்டர் பருகுதுவது இதய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது, இதயத் துடிப்பை அதிகரித்து இதயத்தை பாதிக்கக்கூடும். குளிர்ந்த நீர் செரிமானத்தையும் பாதிக்கிறது. இது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.அதனால்தான் குளிர்காலத்தில் குளிர்ந்த நீருக்கு பதிலாக வெதுவெதுப்பான நீரைக் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெறும் சுவைக்காகவும், பழக்கத்திற்காகவும் குளிர்ந்த நீரை பருகுவது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்… அவை குறித்து விரிவாக பார்க்கலாம்…
1.இதயத் துடிப்பு குறையக்கூடும்:
குளிர்ந்த நீரை குடிப்பது இதயத் துடிப்பைப் பாதிக்கும். எனவே சாதாரண நீரைக் குடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கிறது. இது இதயத்தில் ஆபத்தை அதிகரிப்பதோடு, மூளையிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
2.பற்களில் பாதிப்பு:
குளிர்ந்த நீரை பருகுவது பற்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் ஐஸ் வாட்டர் பற்களில் உள்ள நரம்புகளை பலவீனப்படுத்துகின்றன. மேலும் இது செரிமானத்தையும் பாதித்து, குமட்டல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் தான் நிபுணர்கள் குளிர்காலத்தில் ஐஸ் வாட்டருக்கு பதிலாக வெதுவெதுப்பான வெந்நீரை பருக பரிந்துரைக்கின்றனர்.
3.உடல் பருமன்:
குளிர்ந்த நீர் உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் உடல் பருமன் மேலும் அதிகரிக்கும். இதுவே உடல் எடையை குறைக்கும் பிரச்சனைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உடல் எடையை குறைக்கும் போது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.
4.மலச்சிக்கல்:
குளிர்ந்த நீரை குடிப்பதால் நமது குடல் சுருங்குகிறது. அதனால்தான் செரிமான செயல்முறை சரியாக வேலை செய்யாது. குடல் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால்.. மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஏற்படும்.
5.தொண்டை வலி:
குளிர்ந்த அல்லது குளிரூட்டப்பட்ட நீரை குடிப்பதால் தொண்டை வலி அதிகமாகும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டும்.
6.தலைவலி:
தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு குளிர்ந்த நீரைக் குடிப்பதால் மூளை முடக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. குளிர்ந்த நீர் முதுகெலும்பின் உணர்திறன் நரம்புகளை குளிர்விக்கிறது.. இது மூளையை பாதித்து தலைவலிக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுவோர் கட்டாயம் குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது.
image source: freepik