குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்தக் காலத்தில் அலட்சியமாக இருந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு, காய்ச்சல், தொற்று, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாமல், வெப்பநிலை குறைவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். இதனால் நோய்கள் வேகமாக தாக்குகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த பருவத்தில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம். ஒவ்வொரு பருவத்திலும் நம் உடலுக்கு பல்வேறு வகையான உணவுகள் பொருந்தும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.சில சமயங்களில் தவறான உணவுகளை எடுத்துக்கொள்வது, நோய்க்கு ஆளாக்குகின்றன.
குளிர்காலங்களில்.. குளிர்ச்சி தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மாறாக உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படிங்கள்…
தயிர்:

குளிர்காலத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றுகள் விரைவில் தாக்கும். அப்படிப்பட்ட நிலையில், குளிர்ச்சித் தன்மை கொண்ட தயிரை சாப்பிட்டால்.. சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பருவத்தில் தயிர் சாப்பிட்டால் இருமல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும்.
பால்பொருட்கள் :

ஆயுர்வேதத்தின் படி, பால் மற்றும் பால் பொருட்கள் சளியை அதிகரிக்கக்கூடியவையாகும். நீங்கள் ஏற்கனவே நுரையீரல் பிரச்சனைகள், அடிக்கடி இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், குளிர் காலத்தில் பால் மற்றும் பால் பொருட்களைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.
சாலட்:

இதையும் படிங்க: கர்ப்பமாக இருக்கும் போது கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? - இதை அவசியம் படிங்க!
சாலட்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், குளிர்காலத்தில் சாலட்களை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சாலட்களில் சேர்க்கப்படும் பச்சை காய்கறிகள், குளிர்காலத்தில் செரிமானத்தை பாதிக்கின்றன. இதனால் அசிட்டி, வாய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றனர்.
குளிர் பானங்கள்:
சிலர் குளிர் காலத்திலும் ஐஸ் கட்டிகளுடன் ஜூஸ் மற்றும் கூல் டிரிங்க்ஸ் குடிப்பார்கள். இவற்றை குடித்தால் சளி, காய்ச்சல், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பானங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இது நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. பழச்சாறுகளுக்கு பதிலாக.. பருவகாலத்தில் கிடைக்கூடிய பழங்களை சாப்பிடலாம்.
இனிப்புகள்:

இனிப்புகளை அதிகம் சாப்பிட்டால்.. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. குளிர்காலத்தில் இனிப்புகளை குறைக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால், உடலில் வீக்கம், மூட்டுவலி, மலம் கழிப்பதில் சிக்கல் ஆகியவை ஏற்படும்.
பொறித்த உணவுகள்:

குளிர்காலத்தில் சுட, சுட பஜ்ஜி, சமோசா, போண்டா போன்ற எண்ணெயில் பொறித்த அல்லது காரசாரமான நொறுக்குத்தீனி வகைகளை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமிருக்கும். ஆனால் இந்த பருவ காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 50 சதவீதம் வரை அதிகம் இருப்பதால், உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.