Expert

COPD Awareness Day: உங்களுக்கு COPD இருக்கா? அப்ப நீங்க இத மறந்தும் சாப்பிடக்கூடாது.

  • SHARE
  • FOLLOW
COPD Awareness Day: உங்களுக்கு COPD இருக்கா? அப்ப நீங்க இத மறந்தும் சாப்பிடக்கூடாது.

உணவுமுறையுடன் COPD

எந்தவொரு நோய்க்கும் உணவுமுறை முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், தவறான உணவுப்பழக்கத்தால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இந்த நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்து லக்னோவில் உள்ள பாத்திமா மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆலோசகரான திருமதி தீபா ஷர்மா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். இவரின் கூற்றுப்படி, நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோயானது சுவாசிக்கும் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளின் பற்றாக்குறை ஏற்படலாம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், நுரையீரல் சுவாசிப்பதில் பிரச்சனை அல்லது நீர் தேக்கம் ஏற்படுத்தும் உணவுப் பொருள்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதன்படி, வாயுவை அதிகரிக்கும் பானங்கள் அல்லது காய்கறிகள், சோடியம், ஜங்க் புட்ஸ், எளிய கார்போஹைட்ரேட்டுகள், காஃபின் நிறைந்த உணவுகள், சோடா போன்ற சத்துக்களைத் தவிர்க்க வேண்டும். இந்த நோய் குணமடையும் காலத்திற்கு இது பின்பற்றப்பட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

COPD போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

COPD உள்ளவர்கள் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வாயு நிறைந்த உணவுப்பொருள்கள்

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள், வாயு அல்லது வீக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இது நுரையீரல் செயல்பாடு பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே இது போன்ற உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • முட்டைக்கோஸ் முளைகள்
  • பீன்ஸ்
  • பட்டாணி
  • ப்ரோக்கோலி
  • சார்க்ராட்

இந்த உணவுகள் உடலில் வாயுவை ஊக்குவிக்கிறது. மேலும், இது COPD-யில் இருந்து மீள்வதைத் தடுக்கிறது. எனவே முடிந்தவரை இதைத் தவிர்க்க வேண்டும். இவைகளுக்குப் பதில், எளிதில் செரிமானம் அடையக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காஃபின்

இது COPD-யில் கடினமாக இல்லை. ஆனால், உண்மையில் இது நுரையீரல் நிலையிலிருந்து மீள்வதைத் தடுக்க உதவுகிறது. இந்த நோய்க்கு எடுக்கப்படும் மருந்துகளின் விளைவை காஃபின் அடக்குவதால், மார்பில் நெரிசல் மற்றும் இருமலை உண்டாக்கும். இதில் அதிகளவு காஃபின் கொண்ட பானங்களைக் காணலாம்.

  • கொட்டை வடிநீர்
  • தேநீர்
  • சாக்லேட்
  • சோடா பானங்கள்

COPD தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க காஃபினுக்குப் பதில், அதிக தண்ணீரைக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Benefits Of Coconut Water: தேங்காய் தண்ணீரில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

லாக்டோஸ் உணவுகள்

லாக்டோஸ் உள்ள உணவுப்பொருள்கள் பெரும்பாலும் பால் பொருள்கள் ஆகும். இந்த நோய் உள்ளவர்கள் பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றை எடுத்துக் கொள்வது சுவாசிப்பதில் சிரமம், வீக்கம், கால்சியம் உட்கொள்ளல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கின்றன. எனினும் கால்சியத்தை எடுத்துக் கொள்வது முக்கியமானது என்பதால், கால்சியத்தின் பிற ஆதாரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

சோடா பானங்கள்

கூடுதல் புத்துணர்ச்சியைத் தருவதற்கு சில ஆடம்பரமான உணவுகள் மற்றும் பானங்களில் சோடா பயன்படுத்தப்படுகிறது. எனினும், COPD ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோடா தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இதில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு சுவாச செயல்முறையை மெதுவாக்கிறது. மேலும், இது நுரையீரல் வீக்கத்தைத் தருவதுடன், பல்வேறு சிக்கல்களை உண்டாக்கலாம். சோடா, உடலுக்கு கூடுதல் கலோரிகளையும் தருகிறது. இது மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

எளிய கார்போஹைட்ரேட்டுகள்

இது உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்குகிறது. ஆனால், அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு இருப்பதால் COPD-யின் போது இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான குக்கீகள், கேக்குகள், இனிப்புகள், பைகள் போன்றவற்றில் உள்ள அதிகளவு கார்பன் டை ஆக்ஸைடு சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இவை ஒருவருக்கு சுவாசப் பிரச்சனைகளை அதிகமாக்கலாம். இது நபரை அதிக சோர்வுடனும், உடலில் பலவீனத்தை அதிகரிக்கவும் செய்யலாம். எனவே COPD உள்ளவர்கள் இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் புட்

இந்த உணவுகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கலாம். குறிப்பாக ஒருவர் COPD ஆல் பாதிக்கப்படும் போது, அதிகளவு எளிய கார்போஹைட்ரேட்டுகள், அதிக கலோரிகள், சோடா போன்றவை உள்ள நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைகின்றன. அதிக உடல் எடையுடன் காணப்படுபவர்கள், வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகு COPD ஆல் கடுமையான சுவாசப்பிரச்சனைகளை சந்திக்கலாம்.

ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்வதற்குப் பதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்களைக் கொண்ட உணவுகளைத் தேர்வு செய்யலாம். இது உடலுக்கு அதிக ஆற்றலை உற்பத்தி செய்யவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்வது நுரையீரல் அடைப்பு தொற்றுநோயை அதிகரிக்கலாம் எனவே COPD உள்ளவர்கள் கட்டாயம் இந்த உணவைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?

Image Source: Freepik

Read Next

Eye Health: கண்பார்வை மங்கலா தெரியுதா? அப்போ முழு நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க!

Disclaimer