கர்ப்பமாக இருக்கும் போது கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? - இதை அவசியம் படிங்க!

  • SHARE
  • FOLLOW
கர்ப்பமாக இருக்கும் போது கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? - இதை அவசியம் படிங்க!


Drink Soda While Pregnant: கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானது. இந்த 10 மாதங்களில் தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது அவர்களுக்கானது மட்டுமல்ல, வயிற்றில் வளரக்கூடிய குழந்தைகளுக்குமானது. எனவே எதை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கையாகவும் கடினமாகவும் இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால் இந்த நேரத்தில், கர்ப்பிணிப் பெண் எடுக்கும் உணவு, எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் செய்யும் வேலைகள் கருவில் உள்ள குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கர்ப்ப காலத்தில் சாப்பாடு முதல் பானங்கள் வரை அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம். இந்த நேரத்தில் சில பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

​​​​கர்ப்ப காலத்தில் மது அருந்தக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கர்ப்ப காலத்தில் காபி உட்கொள்வது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் 'கர்ப்ப காலத்தில் குளிர்பானம் பருகலாமா?' என்பது ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் எழும் கேள்வியாகும். இனி கர்ப்ப காலத்தில் குளிர்பானம் அருந்துவது பாதுகாப்பானதா? என்று பார்ப்போம்.

கர்ப்பமாக இருக்கும் போது குளிர்பானம் குடிப்பது பாதுகாப்பானதா?

கர்ப்ப காலத்தில் குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது குளிர்பானங்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். குளிர்பானங்களில் சர்க்கரை, கார்பனேற்றப்பட்ட நீர் மற்றும் காஃபின் போன்ற பல சேர்க்கைகள் உள்ளன. இவை கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல. சிலர் குளிர்பானங்களை சிறிய அளவிலும், எப்போதாவது உட்கொள்வது நல்லது என்று கூறுகிறார்கள்.

கர்ப்ப காலத்தில் சோடா பானங்களை எடுத்துக்கோல்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் குளிர்பானங்களால் ஏற்படும் தீமைகள்:

கர்ப்பிணிகள் குளிர்பானம் அருந்தக் கூடாது என்று பலர் கூறுகின்றனர். ஏனெனில் இந்த புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் காஃபின் அதிகம் உள்ளது. காஃபின் நேரடியாக இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. இது நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கும் செல்கிறது. வளரும் குழந்தைகளுக்கு காஃபின் நச்சுத்தன்மை வாய்ந்தது.

உண்மையில், 300mg க்கும் அதிகமான காஃபின் உட்கொள்வது கருச்சிதைவுகளை ஏற்படுத்தும். எனவே, காஃபின் கொண்ட உணவு மற்றும் பானங்களைத் தவிர்ப்பது அவசியம். காஃபின் நிறைந்த உணவுகளில் குளிர்பானங்கள் முன்னணியில் உள்ளன.

ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது?

பெரும்பாலான ஆய்வுகள் மிதமான அளவு காஃபின், அதாவது தினமும் 200 மில்லி கிராமிற்கும் எடுத்துக்கொள்வது உடலுக்கு தீங்கிளைக்காது என்பதை உறுதி செய்துள்ளன.

is-it-safe-to-drink-soft-drinks-during-pregnancy

காஃபின் மற்றும் கருச்சிதைவுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த பல்வேறு ஆய்வுகள் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வில், காஃபின் நுகர்வுக்கும் கருச்சிதைவுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேசமயம் மற்றொரு ஆய்வு, கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 200 மி.கி அல்லது அதற்கும் அதிகமாக காஃபின் உட்கொண்டால், கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தைக் கண்டறிந்தது. இதில் காபி, கிரீன் டீ, சாக்லேட் என அனைத்து காஃபின் உட்கொள்ளுதலையும் கணக்கில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Image Source: Freepik

Read Next

World Diabetes Day 2023: கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை நிர்வகிக்க சிறந்த வழிகள்!

Disclaimer