கொலஸ்ட்ரால் என்பது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் கொழுப்பு போன்ற பொருளாகும். நம் உடலுக்கு ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் உணவை ஜீரணிக்க உதவும் பொருட்களை உருவாக்க சிறிது கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இதற்குத் தேவையான கொலஸ்ட்ராலை நம் உடலில் உள்ள கல்லீரல் உருவாக்குகிறது. முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பல்வேறு வகையான உணவுகளிலிருந்தும் உடலுக்கு கொலஸ்ட்ரால் கிடைக்கிறது.

ஆனால் இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது இரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் இணைந்து பிளேக்குகளை உருவாக்கும். இவை தமனிகளின் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தமனிகளில் பிளக்குகள் அதிகரிப்பது பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக கரோனரி தமனிகள் குறுகி, அடைப்பு ஏற்பட்டு கரோனரி தமனி நோய் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கிறது.
கொலஸ்ட்ரால் வகைகள் என்ன?
கொலஸ்ட்ராலில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. இவற்றில் ஒன்று உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL).
- HDL கொழுப்பு:
கொழுப்பு மற்றும் புரதத்தின் கலவையால் லிப்போபுரோட்டீன்கள் உருவாகின்றன. லிப்பிடுகள் புரதங்களுடன் இணைக்கப்பட்ட இரத்தத்தின் வழியாக நகரும். இப்படித்தான் உடல் உறுப்புகளுக்கு கொலஸ்ட்ரால் செல்கிறது. HDL என்பது "நல்ல கொழுப்பு" என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இது கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால் உடலின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. HDL கொலஸ்ட்ராலை உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது. அதன் பிறகு கல்லீரல் உடலில் இருந்து கொழுப்பை நீக்குகிறது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்ற HDL உதவுகிறது.
- LDL கொழுப்பு:
எல்டிஎல் (LDL) தமனிகளுக்கு கொலஸ்ட்ராலை எடுத்துச் செல்வதால், "கெட்ட கொழுப்பு" என்று அழைக்கப்படுகிறது. அங்கு அது தமனி சுவர்களில் ஒட்டிக்கொண்டு, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சி எனப்படும் பிளேக் உருவாக வழிவகுக்கிறது. இதனால் தமனிகளில் ரத்தம் உறைந்து, பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- VLDL கொழுப்பு:
இந்த இரண்டு வகைகள் மட்டுமின்றி, VLDL என அழைக்கப்படும் மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதமும் உள்ளது. இது மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் ஆகும்.
VLDL கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. இது உங்கள் தமனிகளில் பிளேக் உருவாக்குகிறது. ஆனால் VLDL மற்றும் LDL வேறுபட்டவை. விஎல்டிஎல் முதன்மையாக ட்ரைகிளிசரைடுகளைக் கொண்டுள்ளது, அதே சமயம் எல்டிஎல் முதன்மையாக கொழுப்பைக் கொண்டுள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் உருவாக காரணம் என்ன?
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக கொழுப்புள்ள உணவை உட்கொள்வது, பொறித்த மற்றும் பதப்பட்ட உணவுகளை சாப்பிடுபது போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு உருவாக காரணமாக அமைகிறது.
- உடல் உழைப்பு இல்லாமை, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உடலில் உள்ள HDL (நல்ல) கொழுப்பைக் குறைத்து, கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
- புகைபிடித்தல் உடலில் உள்ள நல்ல கொழுப்பைக் குறைக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இது நடக்கும். இது எல்டிஎல் கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கிறது.
- சிலருக்கு அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்பட மரபியல் காரணமாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, குடும்ப ஹைபர்கொலெஸ்டிரோலீமியா (FH) எனப்படும் அதிக கொழுப்பின் பரம்பரை குறைபாடு இருந்தாலோ அல்லது பிற நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளாளோ கெட்டகொழுப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Image Source: Freepik