கார், பைக்கிற்கு பெட்ரோல், டீசல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மனித உடல் சுறுசுறுப்பாக இயக்க கொழுப்பு அவசியமானது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், அதிகப்படியான கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேருவது உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பது, பாஸ்ட் ஃபுட்ஸ், முறையான உறக்கம் மற்றும் உணவு முறையை பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களால் தற்போது இளைஞர்களிடையே கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
முக்கிய கட்டுரைகள்

நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என இரண்டு வகையான கொழுப்புப்புரதங்கள் உள்ளன. இது கொழுப்பு மற்றும் புரதத்தால் ஆனது. LDL என்பது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தைக் குறிக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த உதவக்கூடிய 3 முக்கியமான உணவுப்பொருட்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
சியா விதைகள்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், முடி மற்றும் தோல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கும் பெரிதும் உதவுகிறது.
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த இந்த விதைகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது தவிர, சியா விதைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் நோயாளிகள் இதனை உட்கொள்வதால் பெரிதும் பயனடைவார்கள்.
ஓட்ஸ்:
ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது எல்டிஎல் அதாவது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தினமும் ஐந்து முதல் 10 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கரையக்கூடிய நார்ச்சத்தை உட்கொள்ள வேண்டும்.
சிறுநீரக பீன்ஸ், பருப்பு வகைகள், முளைகள், ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய் போன்ற உணவுகளிலும் கரையக்கூடிய நார்ச்சத்து காணப்படுகிறது.
ட்ரை ப்ரூட்ஸ்:
பாதாம் மற்றும் பிற உலர் பழங்களும் கொலஸ்ட்ராலை மேம்படுத்த உதவும். ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்த வால்நட்ஸ், இதயத்தைப் பாதுகாக்கவும், ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் மக்காடமியா நட்ஸ் உள்ளிட்ட அனைத்து உலர் பழங்களிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உலர் பழங்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
Image Source:Freepik