weight gain Tips: எலும்பும் தோலுமா இருக்கீங்களா? அப்போ இதை சாப்பிடுங்க..

  • SHARE
  • FOLLOW
weight gain Tips: எலும்பும் தோலுமா இருக்கீங்களா? அப்போ இதை சாப்பிடுங்க..

இத்தகைய சூழலில் ஒல்லியானவர்கள் உடல் எடையை அதிகரிக்க பல முயற்சிகளில் ஈடுபடுகின்றன. அதிலும் தோல்வியை தழுவுவதால் மன சோர்வுக்கு ஆளாகுகின்றன. ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மூலம் உடல் எடையை அதிகரிக்க முடியும் தெரியுமா? 1500 கலோரிகள் கொண்ட டயட் திட்டத்தை 45 நாட்களுக்கு பின்பற்றுவது மூலம் உடல் எடையை எளிதில் அதிகடிக்க முடியும். ஆனால் இந்த உணவு திட்டம் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு மட்டுமே. எடையை அதிகரிக்க இந்த டயட்டை எப்படி ஃபாளோ பண்ண வேண்டும் என்பதை இங்கே காண்போம். 

எடை அதிகரிப்பதற்கான உணவுத் திட்டம் (Diet Plan For Weight Gain)

காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்? 

காலையில் ஒரு கப் டீ அல்லது காபியுடன் ஒரு கைப்பிடி உலர்ந்த பழங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள்.

காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும்?

* நீங்கள் 4-5 முட்டைகள் (3 முழு மற்றும் 2 முட்டையின் வெள்ளைக்கரு)

* ஒரு கிளாஸ் பாலுடன் வாழைப்பழம்

* வாழைப்பழம் மற்றும் பால் ஸ்மூத்தி

* பனீர் புர்ஜி மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் ஆகியவற்றை ரொட்டியில் கலந்து சாப்பிடலாம். இத்துடன் ஒரு கப் டீ குடிக்கலாம். 

இதையும் படிங்க: Weight Loss Without Exercise: உடற்பயிற்சி செய்யக்கூடாது! ஆனா உடம்பு குறையுனும்? அது எப்படி?

காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு சின்ன கிண்ணம் அல்லது 200 கிராம் ஃப்ரூட் சாலட் அல்லது ஃப்ரூட் மிக்ஸர் சாப்பிடவும். குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட பழங்களை தேர்ந்தெடுக்கவும். 

மதிய உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும்?

ஒரு கப் சிக்கன், டோஃபு, சோயாபீன், ராஜ்மா, பிரவுன் ரைஸ் மற்றும் பனீர் கறி ஆகியவற்றுடன் 1-2 ரொட்டி மற்றும் பருப்பு கொண்ட சாலட்டை நீங்கள் சாப்பிடலாம். இதனுடன் ஒரு கிண்ணம் தயிரையும் சாப்பிடுங்கள்.

மாலையில் என்ன சாப்பிட வேண்டும்?

காலையைப் போலவே, இந்த நேரத்திலும் நீங்கள் டீ மற்றும் காபியுடன் ஒரு கைப்பிடி உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் சாப்பிடலாம். நீங்கள் வறுத்த பருப்பு மற்றும் மக்கானாவையும் உட்கொள்ளலாம்.

இரவு உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும்?

மதிய உணவை எப்படி சாப்பிடுகிறீர்களோ அதே மாதிரி இரவு உணவையும் சாப்பிடலாம். ஆனாக் பகுதி அளவைக் குறைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

படுக்கைக்கு செல்லும் முன் என்ன சாப்பிடலாம்?

மஞ்சள், ஏலக்காய், குங்குமப்பூ போன்றவற்றை பாலில் கலந்து இரவில் தூங்கும் முன் உட்கொள்ளலாம். 

உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக ஒருமுறை மருத்துவரை அணுகவும். இந்த உணவுத் திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உடற்கட்டமைப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு, எங்கள் தொடரைப் பின்தொடரவும்.

Image Source: Freepik

Read Next

Low-Carb Diet:ஆரோக்கியமா உடல் எடையை குறைக்க... இந்த 5 காய்கறி ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்