இன்றைய வேகமான வாழ்க்கை முறைமையில், உடல் பருமன் (Obesity) என்பது பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை எடை அதிகரிக்க முக்கிய காரணங்களாகும்.
ஆனால், இவை அனைத்திலும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குப்பை உணவு மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவை மக்கள் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணங்களாகும். பரபரப்பான வாழ்க்கையின் மத்தியில், மக்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக பெரும்பாலும் வெளிப்புற உணவை அதிகமாக சாப்பிடத் தொடங்குகிறார்கள். இது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, உடல் பருமனையும் ஏற்படுத்தி பல கடுமையான நோய்களையும் அதிகரிக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், எடை அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடிய தவறான உணவுப் பழக்கங்கள் என்ன என்பதை ஊட்டச்சத்து நிபுணர் உஸ்மா பானோ (Msc. Nutrition, DNHE) அவர்களிடமிருந்து தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் மோசமான உணவுப் பழக்கங்கள்
தேவைக்கு மீறி சாப்பிடுதல்
சிலர் பசி இல்லாமலேயே சுவைக்காக அல்லது மன அழுத்தத்தால் அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் தேவைக்கு மீறி கலோரி சேமிக்கப்படுகிறது. அது பின்னர் கொழுப்பாக மாறி எடை அதிகரிக்கிறது.
வறுத்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல்
சமோசா, பக்கோடா, சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவை அதிக எண்ணெய் மற்றும் கலோரி கொண்டவற்றை தொடர்ந்து எடுத்தால், உடலில் கொழுப்பு குவியும்.
துரித உணவை உட்கொள்வது
பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ரெடி-டூ-ஈட் பேக் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் சர்க்கரை, உப்பு, எண்ணெய் அதிகம் கொண்டவை. உடலுக்கு தேவையான சத்துகள் குறைவாக இருப்பதால், உடல் எடை மட்டும் அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகள் போதும்..
அதிகமாக இனிப்புகள் சாப்பிடுவது
சாக்லேட், கேக், பேஸ்ட்ரி, குளிர்பானங்கள் போன்றவை சுவைக்கு பிரபலமாக இருந்தாலும், இதில் உள்ள அதிக சர்க்கரை இன்சுலின் அளவை உயர்த்தி உடலில் கொழுப்பு சேமிக்க வழிவகுக்கிறது.
சாப்பிட்ட உடனே படுத்துக்கொள்வது
சிலருக்கு, குறிப்பாக இரவு உணவிற்குப் பிறகு உடனே படுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளது. இதனால் உணவு சரியாக ஜீரணிக்காமல், மெட்டபாலிசம் (Metabolism) குறைந்து, எடை அதிகரிக்கிறது.
தீர்வு என்ன?
* தவறான உணவுப் பழக்கங்களை மாற்றுவது எடை குறைப்பில் முதல் படி.
* துரித உணவுகளை தவிர்த்து, சத்தான உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
* சாப்பிட்ட பிறகு உடனே படுத்துக்கொள்ளாமல், சிறிய நடைப்பயிற்சி செய்வது நல்லது.
* உணவை அளவாக சாப்பிட்டு, உடற்பயிற்சி தினசரி வாழ்க்கையின் ஓர் அங்கமாக்க வேண்டும்.
இறுதியாக..
உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்கம். அதைச் சரியான நேரத்தில் திருத்திக்கொண்டால், உடல்நலம் பாதுகாப்பதோடு, எடை அதிகரிப்பையும் தடுக்கலாம்.