Low-Carb Diet:ஆரோக்கியமா உடல் எடையை குறைக்க... இந்த 5 காய்கறி ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Low-Carb Diet:ஆரோக்கியமா உடல் எடையை குறைக்க... இந்த 5 காய்கறி ஜூஸ்களை ட்ரை பண்ணுங்க!

லோ கார்ப் டையட் உணவுகள் மிகவும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் அளவை கொண்டுள்ளன. எனவே இதனை நிபுணர்களின் உதவியுடன் கவனமான முறையில் திட்டமிட வேண்டும், இல்லையெல் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

இதையும் படிங்க: Weight Loss: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி? - இந்த டிப்ஸை பாலோப் பண்ணுங்க!

வெற்று கலோரிகள் மற்றும் அதிக திரவ கலோரிகள் மற்றும் நெகட்டீவ் கலோரிகள் குறைவாக இருப்பதால் குறைந்த கார்போஹைட்ரேட் உணவில் சேர்க்க காய்கறிகள் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நெகட்டீவ் கலோரிகளைக் கொண்டிருப்பது, காய்கறிகளை ஜீரணிக்கும் செயல்முறையானது, ஒரு காய்கறியே உடலுக்கு வழங்கும் கலோரிகளை விட அதிக கலோரிகளை எரிக்கிறது, இதனால் விரைவாக எடை இழப்பு ஏற்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உடலின் தேவையை பூர்த்தி செய்வதால் குறைந்த கார்ப் உணவுகளுக்கு காய்கறிகள் இன்றியமையாதவை.

உங்கள் லோ கார்ப் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில குறைந்த கலோரி காய்கறி ஜூஸ்கள் இதோ…

1.தக்காளி + வெள்ளரிக்காய் ஜூஸ்:

தக்காளி ஒரு பழமாக இருந்தாலும், அதன் தனித்துவமான சுவைக்காக அது ஒரு காய்கறியாக கருதப்படுகிறது. மேலும் தக்காளி ஜூஸ் மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ள சிறந்த சிற்றுண்டியாகவும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்துடன் வெள்ளரி, சிறிது தயிர் மற்றும் புதினா, பூண்டு மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் தயாரிக்கலாம்.

2.பீட்ரூட் ஷாட்ஸ்:

பீட்ரூட் மிகவும் சத்தான மற்றும் குறைந்த கலோரி வேர் காய்கறிகளில் ஒன்றாகும், பீட் குறைந்த கார்போஹைட்ரேட் உணவில் சிறந்த சேர்க்கைக்கு உதவுகிறது. இந்த பீட்ரூட் ஷாட்ஸை தயாரிக்க, ஆலிவ் ஆயில், பால்சாமிக் வினிகர் மற்றும் உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றுடன் கூடுதல் இனிப்பு சுவைக்காக சில ஸ்ட்ராபெர்ரிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

3.வெள்ளரிக்காய் + கிவி ஜூஸ்:

இதையும் படிங்க: அட ஆச்சர்யமா இருக்கே!! நின்று கொண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்!

வெள்ளரியில் அதிக நீர்ச்சத்து உள்ளது, எனவே குறைந்த கார்ப் உணவுக்கு சிறந்தது. வெப்பமண்டல பழமான கிவி இந்த பானத்தில் பழம் நன்மையை சேர்க்கிறது, இதில் அதிக அளவு வைட்டமின் சி வெயிட் லாஸ் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

4.கேரட் + ஆரஞ்சு டீடாக்ஸ் டிரிங்க்:

ஆரஞ்சு மற்றும் கேரட் கலந்த சாறு காலை உணவு அல்லது வொர்க்அவுட்டுக்கு பிந்தைய உணவாக எடுத்துக்கொள்ள சிறந்தது. கேரட் மற்றும் ஆரஞ்சுகளில் முறையே வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன, மேலும் அவை இரண்டும் குறைந்த கலோரிகளைக் கொண்டவை.

5.பச்சை வெள்ளரிக்காய் ஷாட்ஸ்:

இந்த சுவையான வெஜ் ஜூஸ் ரெசிபியில் வெள்ளரிக்காய் மற்றும் கீரை உட்பட ஒன்றல்ல இரண்டு குறைந்த கலோரி காய்கறிகள் உள்ளன. இது பூண்டு, கொத்தமல்லி, ஆலிவ் எண்ணெய் மற்றும் கடல் உப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் உணவுக் கட்டுப்பாட்டிற்கு, எடையிழப்பிற்கும் ஏற்றது.

Image Source:Freepik

Read Next

அட ஆச்சர்யமா இருக்கே!! நின்று கொண்டு சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்!

Disclaimer

குறிச்சொற்கள்